ETV Bharat / state

பதுக்கிவைத்திருந்த 6 டன் குட்கா பறிமுதல் - சென்னையில் இருவர் கைது - ஊரப்பாக்கத்தில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 6 டன் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்

சென்னை: ஊரப்பாக்கத்தில் உள்ள குடோனில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த ஆறு டன் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

two arrested
author img

By

Published : Sep 22, 2019, 10:01 AM IST

சென்னை வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை வழியாக தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் வாகனங்களில் கடத்தப்படுவதாக காவல் துறையிருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து, குன்றத்தூர் காவல் துறையினர் தனிப்படை அமைத்து தீவிரமாகக் கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று அவ்வழியாக இருசக்கர வகனத்தில் வந்த ஒருவரை காவல் துறையினர் சோதனை செய்தனர். அவரது வாகனத்தில் தடைசெய்யப்பட்ட குட்கா பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

6 டன் குட்கா பறிமுதல்
6 டன் குட்கா பறிமுதல்

இதையடுத்து, அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த அலிபாபா (52) என்பதும் கூடுவாஞ்சேரி அடுத்த ஊரப்பாக்கத்தில் உள்ள குடோனில் அதிக அளவில் குட்கா பதுக்கி வைத்து சப்ளை செய்து வந்ததும் தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து காவல் துறையினர் குடோனை சோதனை செய்தபோது சுமார் ஆறு டன் எடை கொண்ட குட்கா மூட்டை மூட்டையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து குடோனிலிருந்த சரவணனை (34) காவல் துறையினர் கைது செய்தனர்.

சுமார் ரூ.20 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருள்களை பறிமுதல் செய்த காவல் துறையினர் இதற்கு மூளையாகச் செயல்பட்டுவந்த முருகன் என்பவரை தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

Intro:ஊரப்பாக்கத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 6 டன் குட்கா பறிமுதல் 2 பேர் கைது.

Body:வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை வழியாக தடை செய்யப்பட்ட குட்கா வாகனங்களில் கடத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து குன்றத்தூர் போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக கண்காணித்து வந்தனர் இந்த நிலையில் நேற்று மோட்டார் சைக்கிளில் சந்தேகத்திற்கிடமாக வந்த நபரை மடக்கி விசாரணை செய்தபோது ஊரப்பாக்கத்தை சேர்ந்த அலிபாபா(52), என்பதும் அவரது மோட்டார் சைக்கிளில் தடை செய்யப்பட்ட குட்கா இருந்தது தெரியவந்தது. அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் கூடுவாஞ்சேரி அடுத்த ஊரப்பாக்கத்தில் உள்ள குடோனில் அதிக அளவில் குட்கா பதுக்கி வைத்து சப்ளை செய்து வருவதாக தெரிவித்தார்.Conclusion:இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த குடோனை சுற்றிவளைத்து சோதனை செய்தபோது சுமார் 6 டன் எடை கொண்ட குட்கா மூட்டை மூட்டையாக அடுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அங்கு இருந்த சரவணன்(34), என்பவரை கைது செய்தனர் பறிமுதல் செய்யப்பட்ட குட்கா அனைத்தும் வேனில் கொண்டு வரப்பட்டு மாங்காட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் அலிபாபா, சரவணன் ஆகிய 2 பேரை குன்றத்தூர் போலீசார் கைது செய்துள்ளனர் மேலும் இதற்கு மூளையாக செயல்பட்ட முருகன் என்பவரை
குன்றத்தூர் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர் பறிமுதல் செய்யப்பட்ட குட்கா வின் மதிப்பு சுமார் ரூ.20 லட்சம் வரை இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.