ETV Bharat / state

'6ஆவது தடுப்பூசி முகாமில் இரண்டாவது தவணைத்தடுப்பூசி செலுத்துவோருக்கு முக்கியத்துவம்' - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சனிக்கிழமை நடைபெறவுள்ள 6ஆவது தடுப்பூசி முகாமில் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்துவோருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அமைச்சர் மா.சுப்பிரமணியன்
author img

By

Published : Oct 20, 2021, 8:17 PM IST

சென்னை: சைதாப்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மடுவின்கரை, பாரதி தெருவில் ரூ.30 லட்சம் செலவில் நவீன உபகரணங்களுடன் கூடிய உடற்பயிற்சிக்கூடத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (அக்.20) திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பொதுமக்கள் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

பொதுவெளியில் முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும். இங்கிலாந்தில் நேற்று 40 ஆயிரம் என்கிற அளவில் தொற்று பாதிப்பு உயர்ந்துள்ளது. சிங்கப்பூரில் பாதிப்பு குறைந்து, தற்போது அதிகரித்து வருகிறது. உலக நாடுகள் எல்லாம் அச்சப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

25% பேர் - 2 டோஸ் தடுப்பூசி

தமிழ்நாட்டில் இதுவரை முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் 68 விழுக்காடாக இருக்கின்றனர். இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் 25 விழுக்காடாக உள்ளது. இந்த எண்ணிக்கை கவலையளிக்கிறது. 57 லட்சம் பேர் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.

ஐந்தாவது மெகா தடுப்பூசி முகாமில் 11 லட்சம் பேர், இரண்டாவது தவணை தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர். ஆறாவது தடுப்பூசி முகாமில் 25 லட்சம் பேர், இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இன்று காலை வரை 48 லட்சம் டோஸ் அளவிற்குத் தடுப்பூசி கையிருப்பில் உள்ளது.

6ஆவது மெகா தடுப்பூசி முகாம்

50 ஆயிரம் முகாம்கள் மூலம் வரும் சனிக்கிழமை கோவாக்ஸின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட உள்ளது.

டெங்கு காய்ச்சல் பரவல் தற்போது கட்டுப்பாட்டில் இருக்கிறது. 340 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். அனைத்து மாவட்டங்களிலும் சுகாதாரத்துறை அலுவலர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அத்தோடு மட்டுமல்லாமல் வீடுகளுக்குச் சென்று டெங்கு தடுப்புப் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்" என்று கூறினார்.

இதையும் படிங்க: மூத்த பஞ்சாயத்துத் தலைவியாக பதவியேற்றார் 90 வயது மூதாட்டி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.