கேரளாவின் விழிஞ்சம் கடற்கரைக்கு அப்பால், ஹெராயின், ஆயுதங்கள் கடத்திச் செல்வதாக உளவுத் துறை அளித்த தகவலின்பேரில், இலங்கைப் படகை இந்தியக் கடலோரக் காவல் படையும், போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரும் மார்ச் 25ஆம் தேதியன்று சிறைப்பிடித்து விழிஞ்சம் துறைமுகத்துக்குக் கொண்டுவந்தனர்
கப்பலைச் சோதனை செய்ததில், 300.323 கிலோ ஹெராயின், 5 ஏகே-47 துப்பாக்கிகள், ஆயிரம் 9 எம்.எம். தோட்டாக்கள் மறைத்துவைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், படகின் தண்ணீர்த் தொட்டிக்குள், 301 பாக்கெட்டுகளில் ஹெராயின் மறைத்துவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அதில் பறக்கும் குதிரை சின்னம் இருந்துள்ளது. மேலும், பல போலி ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
விசாரணையில், இந்த ஆயுதங்களும், ஹெராயினும் ஈரானின் சாபகர் துறைமுகத்திலிருந்து கொண்டுவரப்பட்டு இலங்கைப் படகில் ஏற்றப்பட்டது தெரியவந்தது. இவ்விவகாரத்தில் இலங்கையைச் சேர்ந்த நந்தனா, தாசப்பிரியா, குணசேகரா, செனாரத், ரணசிங்கா, நிசாங்கா ஆகிய ஆறு பேரை போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் கைதுசெய்து நீதிமன்றக் காவலில் வைத்திருந்தனர். இதில், பாகிஸ்தான் போதை கும்பலுக்குத் தொடர்பிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
இவற்றைப் பறிமுதல்செய்த சென்னை போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு மண்டல இயக்குநர் அமித் கவாத்தே, கண்காணிப்பாளர்கள் எம். சுரேஷ் குமார், ஆசிஸ் குமார் ஓஜா, உளவுத் துறை அலுவலர்களின் முயற்சிகளைப் பாராட்டினார்.
இதையும் படிங்க: வாணியம்பாடி அருகே கார் மீது லாரி மோதியதில் இருவர் படுகாயம்!