துபாயிலிருந்து சென்னை சா்வதேச விமானநிலையத்திற்கு ஏா்இந்தியா சிறப்பு விமானம் இன்று (ஏப். 17) அதிகாலை வந்தது. அதனை சுத்தப்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, பயணிகள் அமரும் இருக்கை ஒன்று சற்று உயராமாக காணப்பட்டது. அதனை சரி செய்ய ஊழியர்கள் முயன்ற போது இருக்கைக்கு அடியில் வெள்ளை நிற பாா்சல் ஒன்று இருந்துள்ளது. இதுகுறித்து விமான நிலைய மேலாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து அங்கு சென்ற பாதுகாப்பு அலுவலர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பார்சலை பிரித்துப் பார்த்த போது, தங்கக்கட்டிகள் இருப்பது தெரியவந்தது. பின்னர் அங்கு விரைந்த சுங்கத்துறை அலுவலர்கள், தங்கத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். கைப்பற்றப்பட்ட தங்கத்தின் மொத்தம் 6 கிலோ எனவும், அதன் சா்வதேச மதிப்பு ரூ.2.9 கோடி இருக்கும் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: கஞ்சா போதையில் அதிகரிக்கும் குற்றங்கள்: திணறும் காவல் துறை!