தமிழ்நாட்டில் 2019-20 கல்வியாண்டில் ஐந்து, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. பள்ளிக் கல்வித் துறையின் இந்த அறிவிப்பால், ஏற்கனவே பின்பற்றிவரும் முப்பருவ கல்வி முறையில் மாற்றம் நிகழுமா என ஆசிரியர் குழப்பமடைந்துள்ளனர்.
இதுகுறித்து, பள்ளிக் கல்வித் துறை சார்பில் வெளியிடப்பட்ட அரசாணையில் தெளிவான முடிவு இல்லை என்பதால் ஆசிரியர்கள் குழம்பியிருப்பதாக தெரிவித்தனர். எனவே தெளிவான அரசாணை வெளியிட வேண்டும் என பள்ளிக் கல்வித் துறைக்கு, தமிழ்நாடு பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் பார்க்க,
சர்தார் சரோவர் அணையை பார்வையிட்ட நரேந்திர மோடி உங்கள் சொற்களே எங்கள் ஆயுதம் - ஸ்டாலின் ட்விட்டர் பதிவு