ETV Bharat / state

Youtuber Irfan: யூடியூபர் இர்ஃபான் கார் விபத்து - 55 வயது பெண் உயிரிழப்பு!

சென்னை மறைமலை நகர் அருகே சாலையை கடக்க முயன்ற 55 வயது பெண் பிரபல யூடியூபரின் பென்ஸ் கார் மோதிய விபத்தில் உயிரிழந்தார்.

author img

By

Published : May 26, 2023, 6:50 PM IST

Updated : May 27, 2023, 1:17 PM IST

கார் மோதிய விபத்தில் பெண் உயிரிழப்பு
கார் மோதிய விபத்தில் பெண் உயிரிழப்பு

சென்னை காட்டாங்கொளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பத்மாவதி (55). இவர் SRM கல்லூரியில் செக்யூரிட்டியாக பணியாற்றி வந்தார். இந்நிலையில், இவர் இன்று (மே 26) மறைமலை நகரில் உள்ள தனது மகள் வீட்டிற்குச் சென்றார். அங்கிருந்து தனது வீட்டிற்குச் செல்வதற்காக முனிசிபாலிட்டி அலுவலகம் அருகே சாலையை கடந்துள்ளார்.

அப்போது, செங்கல்பட்டில் இருந்து சென்னை நோக்கி செல்லும் சாலையில் அதிவேகமாக வந்த பென்ஸ் கார் ஒன்று பத்மாவதி மீது மோதியது. இந்த கோர விபத்தில் தூக்கிவீசப்பட்ட பத்மாவதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்றனர்.

பின்னர், பெண்ணிடன் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து காரை ஓட்டி வந்த சித்தாலப்பாக்கம் பகுதியை சேர்ந்த அசாருதீன் 34 என்பவரை பிடித்து விசாரணை செய்தனர்.

முதற்கட்ட விசாரணையில் விபத்தை ஏற்படுத்தியது பிரபல யூடியூபர் இர்ஃபானின் கார் என தெரியவந்தது. தொடர்ந்து, அசாருதீன் மீது அஜாக்கிரதையாக செயல்பட்டு மரணத்தை ஏற்படுத்துதல் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அசாருதீன் இர்பானின் கார் ஓட்டுநர் என கூறப்படுகிறது.

இர்ஃபான் தனது யூ டியூப் சேனலில் உணவகங்கள் பற்றியும், உணவுகள் பற்றியும் விமர்சனம் செய்து வந்ததால் பிரபலமானவர். அதன் பிறகு கார்கள் பற்றிய விமர்சனங்களை தனது சேனலில் பதிவேற்றம் செய்ய ஆரம்பித்தார்.

சில மாதங்களுக்கு முன்னதாக அமெரிக்கா சென்ற இர்ஃபான், அங்கு வாழ்ந்து வரும் தமிழகத்தைச் சேர்ந்த பிரபல நடிகரும், முன்னாள் அரசியல்வாதியுமான நெப்போலியன் வீட்டுக்குச் சென்று அவருடைய வீட்டைப் பற்றி தனது யூ டியூப் சேனலில் பதிவேற்றம் செய்து பார்வையாளர்களைக் கவர்ந்தார்.

இவருக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. அதன் பிறகு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை குடும்பத்துடன் ஆளுநர் மாளிகையில் சந்தித்து அதையும் பதிவேற்றம் செய்திருந்தார். இந்த நிலையில் விபத்தை ஏற்படுத்தியது இவருடைய கார் என்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விபத்து நடந்த இடத்தில் இர்ஃபானை பார்த்ததாக பொதுமக்கள் பலரும் கூறி வரும் நிலையில், காரை ஓட்டி வந்ததாக அசாருதீன் (34) மீது மட்டும் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: டிராலி பேக்கில் ஓட்டல் அதிபர் உடல்.. கேரள காதல் ஜோடி சென்னையில் கைது.. பகீர் பின்னணி என்ன?

Last Updated : May 27, 2023, 1:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.