மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்ட நடவடிக்கையால் வட சென்னையில் கரோனா வைரஸ் தாக்கம் குறைந்துள்ளது.
ஆனால், தற்போது கோடம்பாக்கம், அண்ணா நகர், அடையாறு போன்ற இடங்களில் தொற்று பரவல் அதிகரித்துவருகிறது.
இந்த நோய்த்தொற்றை குறைப்பதற்காக மாநகராட்சியும் சுகாதாரத் துறையும் பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்குவது கபசுரக் குடிநீர் வழங்குவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக தினமும் சென்னை மாநகராட்சியில் அமைந்துள்ள 15 மண்டலங்களிலும் மருத்துவ முகாம்கள் நடைபெற்றுவருகிறது.
அதன்படி இன்று (ஜூலை25) 522 மருத்துவ முகாம்கள் நடைபெற்றது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக தேனாம்பேட்டையில் 62 மருத்துவ முகாம்களும், அடுத்தபடியாக ராயபுரத்தில் 53 மருத்துவ முகங்களும், திருவிக நகரில் 50 மருத்துவ முகாம்களும் நடைபெற்றது.
இன்று நடைபெற்ற 522 மருத்துவ முகாம்களில் மொத்தம் 25 ஆயிரத்து 622 நபர்கள் பரிசோதிக்கப்பட்டனர். அதில் 1765 நபர்கள் அறிகுறி இருந்ததால் அருகில் உள்ள கரோனா பரிசோதனை மையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
மீதமுள்ள நபர்களுக்கு நோய்க்கு ஏற்ற மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. மே 8ஆம் தேதிமுதல் இன்றுவரை மொத்தம் 22 ஆயிரத்து 631 மருத்துவ முகாம்கள் நடைபெற்றது.
அதில் 13 லட்சத்து 59 ஆயிரத்து 349 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. மேலும் சென்னை முழுவதும் நாளை 462 மருத்துவ முகாம்கள் நடைபெறும் எனவும் மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.