தமிழ்நாடு முழுவதும் ஐபிஎஸ் அலுவர்கள் உள்பட 51 காவல்துறை அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி திருச்சி எஸ்பி ஜியாவுல் ஹக், கள்ளக்குறிச்சி எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.
சென்னை சிஐடி சிறப்பு பிரிவு அரவிந்த், திருவண்ணாமலை எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார். அதேபோல திருநெல்வேலி மாவட்ட எஸ்பியாக மணிவண்ணனும் கரூர் மாவட்ட எஸ்பியாக பகலவனும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் திண்டுக்கல் மாவட்ட எஸ்பியாக ரவளி பிரியாவும், நாமக்கல் எஸ்பியாக சக்தி கணேசனும், ஈரோடு எஸ்பியாக தங்கதுரையும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோல் 51 காவல்துறை அலுவலர்களை தமிழ்நாடு அரசு பணியிட மாற்றம் செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும் 8 ஐபிஎஸ் அலுவலர்கள் ஐஜியாகவும், 9 ஐபிஎஸ் அலுவலர்கள் டிஐஜியாகவும் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
இதையும் படிங்க: மாநகராட்சி ஆணையர் இடமாற்றம் - எதிர்ப்பு தெரிவித்து தூய்மைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்