சென்னை: இதுதொடர்பாக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே. பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவில்,
- சென்னை ஆயுதப்படை காவல் ஐ.ஜி.பியாக இருந்த ஜெ. லோகநாதன் சென்னை பெருநகர காவல் தலைமையக கூடுதல் ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
- சென்னை பெருநகர காவல்துறை கூடுதல் ஆணையராக இருந்த எம்.டி. கணேச மூர்த்தி சென்னை பெருநகர காவல் தலைமையக ஐ.ஜி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- எம். ராஜேந்திரன் தூத்துக்குடி பேரூரணியில் உள்ள காவலர் பணியமர்வு பயிற்சி பள்ளி முதல்வராக இடமாற்றம்.
- டி.பி. சுரேஷ்குமார் திருநெல்வேலி நகர காவல் சட்ட ஒழுங்குப் பிரிவு துணை ஆணையராக இடமாற்றம்.
- எஸ். செந்தில் சென்னை பூவிருந்தவல்லி தமிழ்நாடு சிறப்பு காவல் 3ஆவது அணியில் கமாண்டன்ட் ஆக இடமாற்றம் செய்யப்ட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஐபிஎஸ் அலுவலர்கள் பணியிட மாற்றம் - பின்னணி என்ன?