ETV Bharat / state

பைக் ரேஸ் செய்து அட்டூழியம்: காவல் உதவி ஆய்வாளரின் மகன் உள்பட 5 பேர் கைது

சென்னையில் பைக் ரேஸ் செய்து அட்டூழியம் செய்த காவல் உதவி ஆய்வாளரின் மகன் உள்பட 5 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

பைக் ரேஸ் செய்து அட்டூழியம்
பைக் ரேஸ் செய்து அட்டூழியம்
author img

By

Published : Mar 23, 2022, 7:41 PM IST

சென்னை: பைக் ரேஸில் ஈடுபட்டு வாகனம் ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க, சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து இரவுப்பணியில் ஈடுபடும் காவல் துறையினர் பைக் ரேஸில் ஈடுபடும் இளைஞர்களைப் பிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

தீவிர கண்காணிப்பு: அதன்படி சென்னை பாரிமுனைப்பகுதியில் இருந்து இளைஞர்கள் பைக் ரேஸ் செய்து புறப்பட்டு வருவதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. காவல் துறையினர், ஆங்காங்கே தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் வியாசர்பாடி எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் புளியந்தோப்பு போக்குவரத்துப் புலனாய்வு காவல் துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

5 பேர் கைது: அப்போது இருசக்கர வாகனங்களில் அதிவேகமாக வந்து சாகசங்களில் ஈடுபட்ட 5 பேரை மடக்கிப்பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் காவல் உதவி ஆய்வாளர் தனசேகரின் மகன் டிவின் குமார்(20), அவரது நண்பர்கள் மோவின் (20), ஹரிஷ் குமார் (22), பாலாஜி (22), சல்மான் (18) ஆகியோர் என்பது தெரியவந்தது.

சிறையில் அடைப்பு: அவர்களைக் கைது செய்த காவல் துறையினர் 5 இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்தனர். பின்பு கைது செய்யப்பட்ட 5 பேரும் எழும்பூர் நீதிமன்றத்தில் முன்னிறுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த 19ஆம் தேதி இரவு மெரினா காமராஜர் சாலையில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சென்னை மாநகராட்சிப் பள்ளி மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின் வழங்கப்படும் - சென்னை மாநகர மேயர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.