ETV Bharat / state

ஹாங்காங்கில் இருந்து சென்னைக்கு கொண்டுவரப்பட்ட 5ஜி செல்போன்கள் - சுங்கத்துறையினர் பறிமுதல் - சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை: ஹாங்காங்கில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு முகக் கவசங்கள் என்ற பெயரில் வந்த பார்சலில் ரூ. 70 லட்சம் மதிப்புள்ள 5ஜி செல்போன்கள் இருந்ததையடுத்து அவற்றை சுங்கத்துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

5 G Cell phone seized in Chennai airport

author img

By

Published : Jul 31, 2020, 1:15 PM IST

சென்னை பன்னாட்டு விமான நிலையத்துக்கு கரோனா ஊரடங்கு காலத்தில் மருத்துவ உபகரணங்கள் கொண்டு வர சரக்கு விமானங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. அவ்வப்போது மருத்துவ உபகரணங்கள் என்ற பெயரில் வெளிநாடுகளில் இருந்து போதை மாத்திரைகள் கடத்தப்பட்டு வந்ததை சுங்க இலாகா அலுவலர்கள் கண்டுபிடித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஹாங்காங்கில் இருந்து வந்த சரக்கு விமானத்தில் இருந்த பார்சல்களை சுங்கதுறை அலுவலர்கள் ஆய்வு செய்தனர். அப்போது முகக் கவசங்கள் என்று பெயரிடப்பட்ட பார்சல்களை சந்தேகத்தின் பேரில் பிரித்து பார்த்தபோது, இந்தியாவில் இதுவரை அறிமுகப்படுத்தாத 5ஜி செல்போன்கள் இருந்ததை கண்டுபிடித்தனர்.

70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பிரபல நிறுவனமான சாம்சங் கேலக்ஸியின் 5ஜி செல்போன்கள் இருந்தன. உடனே அவற்றை சுங்கத்துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். இவற்றை கடத்தி வந்தவர்கள் யார்? இந்தியாவில் இதுவரை வராத 5ஜி புதிய செல்போன்கள் ஏன் கொண்டு வந்தார்கள் என சுங்க இலாகா அலுவலர்கள் விசாரித்து வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.