ETV Bharat / state

தோல் ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் 5 மான்கள் இறப்பு - நீதிமன்றத்தில் தமிழ்நாடு வனத் துறை தகவல்!

சென்னை: மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் நாய் கடித்தும், நெகிழியைச் (பிளாஸ்டிக்) சாப்பிட்டும், சாக்கடையில் விழுந்தும் ஐந்து மான்கள் இறந்துள்ளதாக தமிழ்நாடு வனத் துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 deer’s dead due to plastic consumption in guindy, forest said before MHC

author img

By

Published : Nov 3, 2020, 8:53 PM IST

சென்னை கிண்டியில் உள்ள மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவன வளாகத்துக்குள் இருந்த ஆயிரத்து 500 மான்களை இடமாற்றம் செய்ய தமிழ்நாடு அரசு முடிவு செய்தது. எந்த ஆய்வுகளும் நடத்தாமல் மான்களை இடமாற்றம் செய்ய அனுமதிக்கக் கூடாது எனக் கூறி, விலங்கின ஆர்வலர் முரளிதரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மான்களை இடமாற்றம் செய்ய அனுமதித்ததுடன், அதுசம்பந்தமாக அறிக்கை தாக்கல்செய்யவும் வனத் துறைக்கு உத்தரவிட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வில் இன்று (நவ. 03) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு வனத் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பெரும்பாலான மான்கள் இடமாற்றம் செய்யப்பட்டுவிட்டதாகவும், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் இருந்த 20 மான்களில், ஐந்து மான்கள் நாய்கள் கடித்தும், நெகிழிப் பொருள்களை உண்டும், சாக்கடையில் விழுந்தும் இறந்துவிட்டதாகவும், எஞ்சியுள்ள 15 மான்களைப் பத்திரமாகப் பிடித்து இடமாற்றம் செய்ய இருப்பதால், அது குறித்த அறிக்கையை தாக்கல்செய்ய கால அவகாசம் வேண்டும் எனவும் கோரிக்கைவிடுத்தார்.

இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், விசாரணையை ஜனவரி 21ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க...உடற்கல்வி ஆசிரியர் நியமனத்தில் குளறுபடியா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.