கரோனா வைரஸ் நோய்த்தொற்றுப் பரவலால், தாயகம் திரும்ப முடியாமல் சிக்கித்தவித்த இந்தியர்கள் சிறப்பு மீட்பு விமானங்கள் மூலம் மீட்கப்பட்டுவருகின்றனர்.
இந்நிலையில் அமெரிக்காவின் சிக்காகோ நகரிலிருந்து 85 இந்தியா்களுடன் சிறப்பு மீட்பு விமானம் நேற்று (செப்.2) இரவு 12மணிக்கும், சவுதி அரேபியாவின் ரியாத்திலிருந்து 213 இந்தியா்களுடன் சிறப்பு மீட்பு விமானம் இரவு 1 மணிக்கும், துபாயிலிருந்து 177 இந்தியா்களுடன் சிறப்பு மீட்பு விமானம் இன்று (செப்.3) அதிகாலை 1.30 மணிக்கும் சென்னை வந்தன.
அவா்களில் பெரும்பான்மையானோர் ஏற்கனவே மருத்துவப் பரிசோதனை சான்றிதழ்களுடன் வந்தனா். இதனால் மருத்துவக் குழுவினா் சான்றிதழ்களைச் சரிபாா்த்து கைகளில் ரப்பா் ஸ்டாம்பு முத்திரையைப் பதித்தனா்.
மருத்துவச் சான்றிதழ்களுடன் வராதவர்களுக்கு மட்டும் சென்னை விமான நிலையத்தில் கரோனா மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. பின்பு அனைத்து நபர்களுடைய இ-பாஸ்களையும் பரிசோதித்து, அவரவா் வீடுகளுக்கு 14 நாள்கள் தனிமைப்படுத்துதலுக்கு அனுப்பப்பட்டனா்.