ETV Bharat / state

4,000 கோடி ரூபாய் கடன் மோசடி விவகாரம்: நான்கு பேருக்கு நீதிமன்ற காவல்! - MHC

வங்கிகளில் 4,000 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்ததாக, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட சுரானா நிறுவனத்தின் இயக்குநர் உட்பட நான்கு பேரை ஜூலை 27 வரை சிறையில் அடைக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

4,000 கோடி ரூபாய் கடன் மோசடி விவகாரம்: நான்கு பேருக்கு நீதிமன்ற காவல்!

author img

By

Published : Jul 13, 2022, 5:09 PM IST

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு தங்கம் இறக்குமதி செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்த சுரானா இண்டஸ்ட்ரியல் லிமிடெட் நிறுவனம், சுரானா பவர் லிமிடெட் மற்றும் சுரானா கார்ப்பரேஷன் லிமிடெட் ஆகியவை வங்கிகளிடமிருந்து 4,000 கோடி ரூபாய் பணத்தை கடனாக பெற்று முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதில் சுரானா இண்டஸ்ட்ரியல் லிமிடெட் நிறுவனம் ஐடிபிஐ வங்கியில் 1,301.76 கோடி ரூபாய் கடனும், சுரானா பவர் லிமிடெட் சார்பில் 1,495.76 கோடி ரூபாய் கடனும், சுரானா கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் 1,188.56 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்ததாகவும், இந்த கடன் தொகையை திருப்பி செலுத்தவில்லை என கூறி அந்த நிறுவனங்களுக்கு எதிராக சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.

மேலும் இந்த கடன் தொகையை சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக, அந்த நிறுவனத்தின் இயக்குனர்கள் தினேஷ் சந்த் சுரானா, விஜயராஜ் சுரானா நிறுவன ஊழியர்கள் ஆனந்த் மற்றும் பிரபாகரன் ஆகியோர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நான்கு பேரும், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு ஆஜர்படுத்தபட்டனர். அவர்களை ஜூலை 27 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ஆருத்ரா கோல்டு நிறுவனமே பணத்தை சரியாக தந்துவிடும்.. வாடிக்கையாளர்கள் விரக்தி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.