உலகை உலுக்கும் கரோனா வைரஸ் பரவல் காரணமாக உலக நாடுகள் அனைத்தும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளன. அதனால், அண்டை நாடுகளுக்குச் சென்றவர்கள், தாய் நாட்டிற்கு திரும்ப முடியாமல் தவித்துவருகின்றனர். அதன்படி, சூடான் நாட்டில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள் 400க்கும் மேற்பட்டோர், தங்களை தாய்நாட்டிற்கு அழைந்து வர நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு அரசிற்கு கோரிக்கை வைத்து, அதனைக் காணொலியாக சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.
அந்தக் காணொலியில், "சூடான் நாட்டில் இந்தியர்கள் மொத்தம் 1,500 பேர் உள்ளோம். அதில் 400க்கும் மேற்பட்டோர் தமிழர்கள். நாங்கள் அனைவரும் தாய்நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகிறோம். இங்கு எங்களுக்கு போதுமான மருத்துவ உதவிகள் கிடைப்பதில்லை. கரோனா பரிசோதனையும் செய்யப்படவில்லை. எனவே, தமிழ்நாடு அரசு எங்களை மீட்டு சொந்த நாட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டும்" என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள் - நடவடிக்கை எடுக்கக்கோரி ஆட்சியரிடம் மனு!