ETV Bharat / state

புனேயிலிருந்து தமிழ்நாட்டிற்கு 4.20 லட்சம் தடுப்பூசி மருந்துகள் வருகை - Tamilnadu

சென்னை: புனேயிலிருந்து தமிழ்நாட்டிற்கு நான்கு லட்சத்து 20 ஆயிரம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் விமானம் மூலம் வந்தடைந்தன.

சென்னை: புனேவிலிருந்து தமிழ்நாட்டிற்கு சுமார் 4லட்சத்து20 ஆயிரன் டோஸ் கோவிசீல்டு தடுப்பூசிகள் விமானம் மூலம்  வந்துள்ளது.

author img

By

Published : Jun 1, 2021, 8:04 PM IST

Updated : Jun 1, 2021, 8:10 PM IST

தமிழ்நாட்டில் பரவிவரும் கரோனா இரண்டாம் அலையைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. தளா்வுகளற்ற முழு ஊரடங்கு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது.

அத்தோடு தடுப்பூசிகள் போடுவதையும் தீவிரப்படுத்தியுள்ளது. மேலும் தடுப்பூசிகள் சிறப்பு முகாம்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு அவர்கள் இருப்பிடங்களுக்கே சென்று தடுப்பூசிகள் போடுதல் போன்ற பணிகளிலும் அரசு ஈடுபட்டுள்ளது.

இதனால், தமிழ்நாட்டிற்குக் கூடுதலாகத் தடுப்பூசிகள் தேவைப்படுகின்றன. ஆனால், ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்குத் தேவையான தடுப்பூசிகளை முழுமையாக வழங்காமல் குறைவாகவே வழங்குகிறது.

இதையடுத்து தமிழ்நாட்டிற்குக் கூடுதல் தடுப்பூசிகளை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும் என்று மாநில அரசு வலியுறுத்திவருகிறது. இருந்தபோதிலும், கடந்த சில நாள்களாகத் தமிழ்நாட்டிற்குத் தடுப்பூசிகள் வரவில்லை.

இதனால், தமிழ்நாட்டில் பொதுமக்களுக்குத் தடுப்பூசிகள் போடப்படுவது மூன்று நாள்களுக்கு நிறுத்தப்படவுள்ளது. ஜூன் 6ஆம் தேதிக்கு மேல் ஒன்றிய அரசு தடுப்பூசிகள் அனுப்பிய பின்னரே மீண்டும் தடுப்பூசிகள் போடப்படும் எனச் சுகாதாரத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் நேற்று (மே 31) தெரிவித்தார்.

இது தமிழ்நாட்டு மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியது. ஆனாலும் தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசை தொடர்ந்து வலியுறுத்திவந்தது. இந்நிலையில், தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்ற ஒன்றிய சுகாதாரத் துறைத் தமிழ்நாட்டிற்கு கோவிஷீல்ட் தடுப்பூசிகளை அனுப்ப முடிவுசெய்தது.

அதன்படி புனேயிலுள்ள மத்திய மருந்து சேமிப்பு குடோனிலிருந்து 36 பார்சல்கள், நான்கு லட்சத்து 20 ஆயிரத்து 570 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் விமானம் மூலம் சென்னை விமான நிலையத்திற்கு இன்று (ஜூன் 1) மாலை வந்துசேர்ந்தன.

சென்னை விமான நிலையத்திலுள்ள ஊழியர்கள் அந்தப் பார்சல்களை இறக்கி மக்கள் நல்வாழ்வுத் துறை அலுவலர்களிடம் ஒப்படைத்தனர். அவர்கள் குளிர்சாதன வாகனங்களில் தடுப்பூசி மருந்து பார்சல்களை ஏற்றி சென்னை, தேனாம்பேட்டையிலுள்ள டிஎம்எஸ் அலுவலக மருந்து பாதுகாப்பு குடோனுக்கு எடுத்துச் சென்றனர்.

இதே விமானத்தில் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனைகளுக்கும் மூன்று பார்சல்களில் 36 ஆயிரம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகளும் வந்துள்ளன. இதனால், இன்று ஒரே நாளில் தமிழ்நாட்டிற்கு நான்கு லட்சத்து 56 ஆயிரத்து 570 டோஸ் தடுப்பூசிகள் வந்தடைந்துள்ளன.

Last Updated : Jun 1, 2021, 8:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.