சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் 20 லட்சம் தடுப்பூசிகள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இலக்கைவிட கூடுதலாக 28 லட்சத்து 91 ஆயிரத்து 21 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இரண்டாவது மாபெரும் கரோனா தடுப்பூசி முகாம் செப்டம்பர் 19ஆம் தேதி 15 லட்சம் பேருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இலக்கைவிட கூடுதலாக 16 லட்சத்து 43 ஆயிரத்து 879 பேருக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
15 லட்சம் தடுப்பூசிகள் செலுத்த இலக்கு
இந்நிலையில், மூன்றாவது மாபெரும் தடுப்பூசி முகாம் தமிழ்நாடு முழுவதும் வரும் 26ஆம் தேதி 20 ஆயிரம் தடுப்பூசி முகாம்கள் மூலம் 15 லட்சம் தடுப்பூசிகள் செலுத்துவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த மாபெரும் தடுப்பூசி முகாமை பயன்படுத்தி மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டு கரோனா ஒழிக்கும் வகையில் தங்கள் பங்கை செலுத்திட வேண்டும். தடுப்பூசி செலுத்திக்கொள்வோம், கரோனாவை விரட்டுவோம் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : கரோனா காலத்தில் பணியாற்றிய மருத்துவப்பணியாளர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்