ETV Bharat / state

38 சவரன் நகை கொள்ளை: கொள்ளையர்கள் 22 மணி நேரத்தில் கைது!

author img

By

Published : Nov 27, 2020, 5:26 PM IST

சென்னை: 2 லட்ச ரூபாய் பணம், 38 சவரன் தங்க நகை ஆகியவற்றை கொள்ளையடித்த கொள்ளையர்களை காவல்துறையினர் 22 மணி நேரத்தில் கைது செய்தனர்.

சென்னையில் 38 சவரன் நகை கொள்ளை  சென்னை நகை கொள்ளையர்கள் கைது  சென்னை நகை திருட்டு  38 shaving jewelery robbery in Chennai  38 shaving jewelry robbers arrested in 22 hours  Chennai jewel theft  Chennai jewelery robbers arrested
Chennai jewel theft

சென்னை அசோக் நகர் 15வது அவென்யூவில் குடும்பத்துடன் வசித்து வருபவர் பார்த்தசாரதி(வயது 65). தனியார் நிறுவனத்தில் பணிப்புரிந்து ஓய்வு பெற்றவரான இவர் நிவர் புயல் காரணமாக கனமழை பெய்து வந்ததால் கடந்த 24 ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சாஸ்திரி நகரில் உள்ள உறவினரின் வீட்டிற்குச் சென்றுள்ளனர்.

இந்நிலையில், புயல் முடிந்த பின்பு நேற்று காலை வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளேச் சென்று பார்த்த போது பீரோவிலிருந்த இரண்டு லட்ச ரூபாய் பணம், 38 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து உடனடியாக பார்த்தசாரதி குமரன் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்ப்டையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கும் போது சம்பவ இடத்தில் சிசிடிவி இல்லாததால், அடுத்தகட்ட நடவடிக்கையில் காவல் துறையினர் இறங்கியுள்ளனர்.

குறிப்பாக உறவினர் வீட்டிற்குச் செல்வதை அறிந்த அடையாளம் தெரியாத நபர்கள் தான் கொள்ளையில் ஈடுபட்டிருக்க வாய்ப்பு என எண்ணி பார்த்தசாரதி வீட்டிற்கு அருகாமையில் உள்ள கே.கே நகர் அம்பேத்கர் குடியிருப்பில வசிக்கக்கூடிய நபர்கள் மீது சந்தேகம் எழுந்துள்ளது.

அங்கு, ஏற்கெனவே குற்றச் செயல்களில் ஈடுபட்டு கைதானவர்களை காவல் துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அதில், அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஷ்(வயது 18), பிரகாஷ்(வயது 20), விக்கி (எ) விக்னேஷ் ஆகியோர் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்து.

இதையடுத்து, அவர்கள் மூவரையும் காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், பார்த்தசாரதி உறவினர் வீட்டிற்குச் செல்வதை அறிந்து நோட்டமிட்டு கொள்ளையடித்ததாக தெரிவித்தனர்.

பின்னர் அவர்களிடமிருந்து 38 சவரன் தங்க நகைகள், 22 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்து மீதமுள்ள பணத்தை பறிமுதல் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் 22 மணி நேரத்தில் கொள்ளையர்களை கைது செய்த காவல்துறையினரை பொதுமக்கள் பாராட்டியுள்ளனர்.

இதையும் படிங்க:தொடர் வழிப்பறி: 2 சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.