ETV Bharat / state

24 மணி நேரத்தில் திமுகவில் இணைந்த 35 ஆயிரம் பேர்! - திமுக உட்கட்சி தேர்தல்

சென்னை : ’எல்லோரும் நம்முடன்’ என்ற திட்டம் மூலம் 24 மணி நேரத்தில் 35 ஆயிரம் பேருக்கு மேல் திமுகவில் உறுப்பினர்களாக இணைந்துள்ளதாக கட்சித் தலைமை தெரிவித்துள்ளது.

35-thousand-people-joint-dmk-in-24-hours in ellorum nammudan scheme

author img

By

Published : Sep 16, 2020, 9:14 PM IST

நேற்று (செப்.15) நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் 'எல்லோரும் நம்முடன்' என்ற உறுப்பினர் சேர்க்கை முன்னெடுப்பைத் தொடங்கி வைத்தார்.

இதன் மூலம் அடுத்த 45 நாள்களில் ஆன்லைன் மூலம் குறைந்தது 25 லட்சம் உறுப்பினர்களையாவது சேர்க்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக தனி வலைதளமும் தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் ஆன்லைன் மூலம் 35 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் திமுக உறுப்பினர்களாகப் பதிவு செய்துள்ளனர் என திமுக தலைமை தெரிவித்துள்ளது.

ஆன்லைன் மூலம் உறுப்பினர்களாகப் பதிவு செய்யும் நபர்களுக்கு வழக்கமான உறுப்பினர்களுக்கு வழங்குவதற்கு இணையான உரிமைகள் வழங்கப்படும். ஆனால் அவர்கள் திமுக உள்கட்சித் தேர்தலில் வாக்களிக்க விரும்பினால் ஓராண்டு உறுப்பினராக நிறைவு செய்திருக்க வேண்டும். இல்லையென்றால், ஆன்லைனில் 25 புதிய உறுப்பினர்களை சேர்த்திருக்க வேண்டும் என்றும் திமுக சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.