தமிழ்நாட்டில் சட்டவிரோதமாக ரயில் டிக்கெட் முன்பதிவு நடைபெறுவதாக ரயில்வே காவல்துறையினருக்கு புகார் வந்தது. அதனைத் தொடர்ந்து, ரயில்வே பாதுகாப்பு காவல்துறையினர் சென்னை, திருச்சி உட்பட 6 கோட்டங்களில் சோதனை நடத்தினர்.
அப்போது, ரயில் டிக்கெட்டுகளை சட்டவிரோதமாக முன்பதிவு செய்த 32 நபர்களை ரயில்வே காவல்துறையினர் கைது செய்தனர்.
இதையடுத்து, அவர்களிடமிருந்து, சட்டவிரோதமாக ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய பயன்படுத்தப்பட்ட செல்போன்கள், கணினிகள், அச்சுப்பொறிகள் போன்றவை காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 32 பேரிடமிருந்து மொத்தமாக ரூ.3,81,446 மதிப்புள்ள 271 நேரடி டிக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் 12 லட்சம் மதிப்புள்ள 621 காலாவதியான டிக்கெட்டுகள் மற்றும் 16 லட்சம் மதிப்புள்ள 892 மின் டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.