ETV Bharat / state

இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட்: சட்டவிரோதமாக டிக்கெட் விற்ற 30 பேர் கைது..! - India Australia cricket match

சென்னை சேப்பாக்கத்தில் சட்ட விரோதமாக, இந்தியா-ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை விற்பனை செய்தவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 42 டிக்கெட்டுகள் மற்றும் 55 ஆயிரம் ரொக்கப் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சட்ட விரோதமாக டிக்கெட் விற்ற 30 பேர் கைது..போலீசார் தீவிர விசரணை!
இந்தியா-ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டி
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 9, 2023, 10:34 AM IST

சென்னை:

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான உலக கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடருக்கான லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் நேற்று (அக். 8) நடைபெற்றது. விறுவிறுப்பாக சென்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில், கிரிக்கெட் போட்டி நடைபெற்ற சேப்பாக்கம் மைதானம் அருகே சட்ட விரோதமாக கள்ள சந்தையில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை விற்பனை செய்ததாக 30 நபர்களை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 42 டிக்கெட்டுகள் மற்றும் 55 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்தனர்.

சென்னை, சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில், நேற்று (அக்.08) இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியினருக்கு இடையே உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்நிலையில், இந்தியா- ஆஸ்திரேலியா இடையே நடக்கும் போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ள சந்தையில், சட்ட விரோதமாக விற்பனை செய்பவர்களை கண்காணித்து கைது செய்ய, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இதையும் படிங்க: இந்தியா - ஆஸ்திரேலியா ஆட்டத்தில் இவ்வளவு சாதனைகளா? கோலி முதல் ஹேசில்வுட் வரை நீங்கள் படிக்க வேண்டியது!

இதனையடுத்து, திருவல்லிக்கேணி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை காவல் குழுவினர், சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளான பட்டாபிராம் கேட், வாலாஜா சாலை, பெல்ஸ் ரோடு, வாலாஜா ரோடு சந்திப்பு, விக்டோரியா ஹாஸ்டல் சாலை சந்திப்பு, சேப்பாக்கம் ரயில் நிலையம் ஆகிய இடங்களில் தீவிரமாக கண்காணித்தனர்.

இந்நிலையில், சேப்பாக்கம் பகுதியில் சட்ட விரோதமாக, கள்ள சந்தையில் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை அதிக விலைக்கு விற்பனை செய்த 30 நபர்களை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அதனைத்தொடர்ந்து, அவர்களிடம் இருந்து 42 டிக்கெட்டுகள் மற்றும் 55 ஆயிரம் ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அதனைத்தொடர்ந்து, கைது செய்யப்பட்ட நபர்களிடம் விசாரணை செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: "பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்வோம்" - புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.