சென்னை: ஜமாலியா ஹைதர் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் ராம் பால் (31). இவர் சென்னை மேட்டுப்பாளையம் பிஎச் சாலையில் தேவேந்திரபால் சவுகார் என்கிற பெயரில் 48 வருடங்களாக அடகு கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு அடகு கடைக்கு செல்போன் ரீசார்ஜ் செய்வதற்காக ஜாஃபர் அலி என்பவர் வந்துள்ளார். அவர் தினமும் ரீசார்ஜ் செய்வதற்காக வந்து அங்கு ராம் பாலுடன் பழக்கம் ஆகியுள்ளார். மேலும் ஜாபர் ரலி தான் ஒரு கட்டுமான நிறுவனம் நடத்தி வருவதாகவும் தெரிவித்திருந்துள்ளார்.
இதையடுத்து கடந்த மாதம் ஜாஃபர் அலி அடகு கடை உரிமையாளர் ராம்பாலை செல்போனில் தொடர்பு கொண்டு, தனது அத்தை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது சிகிச்சைக்காக 32 சவரன் தங்க நகையை தாம்பரம் பகுதியில் உள்ள சோபா சந்து என்பராது அடகு கடையில் சுமார் 10 லட்ச ரூபாய்க்கு அடகு வைத்துள்ளதாகவும், தற்போது அதை மீட்க முடியாமல் மூழ்கும் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்து அதை நீங்கள் மீட்டு வைத்துக் கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.
இதையடுத்து ராமபால், ஜாபர் அலியுடன் தாம்பரத்தில் உள்ள சோபா சந்து என்பவர் அடகு கடைக்கு சென்று அங்கு அடகு வைத்திருந்த 32 சவரன் தங்க நகையை 10 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் கொடுத்து மீட்டெடுத்து சென்று உள்ளார். இதையடுத்து கடந்த மாதம் 29ஆம் தேதி ராம்பாலின் அடகு கடைக்கு வந்த ஜாபர் அலி 3 சவரன் தங்க நகையை அடகு வைத்து ஒரு லட்சத்து 11 ஆயிரம் ரூபாயை பெற்று சென்று உள்ளார். பின்னர் மீண்டும் கடந்த 22ஆம் தேதி அதே அடகு கடைக்கு சென்று 50 கிராம் தங்க நகையை அடகு வைத்து இரண்டு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்றுச் சென்றுள்ளார்.
இந்த நிலையில் ஜாபர் அலி தொடர்ச்சியாக நகைகளை அடகு வைத்து பணத்தை வாங்கி செல்வதால் ராம்பாலுக்கு இது குறித்து சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து அவர் அடகு வைத்த நகைகளை ஆய்வு செய்து பார்த்தபோது அது தங்க முலாம் பூசப்பட்ட போலி நகை என தெரியவந்துள்ளது.
இதனால் அதிர்ச்சடைந்த ராம்பால் மீண்டும் ஜாபர் அலிக்கு தொடர்பு கொண்டு நகைகள் வேண்டும் என கேட்டுள்ளார். அதன் அடிப்படையில் நேற்று முன்திடம் இரவு ஜாபர் அலி தனது இரண்டு நண்பர்களுடன் ராம் பாலின் அடகு கடைக்கு வந்துள்ளார். அப்போது ராம்பால் உறவினர்களுடன் சேர்ந்து மூவரையும் மடக்கி பிடித்து ஓட்டேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஜாஃபர் அலி (46), ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்த சைதாலு (40), ஜொனலகட்டா ஜெயராஜ் (44) என தெரியவந்தது. மேலும் மூவரிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: அசாமில் தூங்கிக்கொண்டிருந்த தம்பதி கொடூரமாக கொலை.. போலீஸ் தீவிர விசாரணை!