ETV Bharat / state

போகி எதிரொலி: சென்னையில் கடும் பனிமூட்டம்- 2வது நாளாக விமான சேவைகள் பாதிப்பு! - சென்னை விமான சேவை

Chennai Flights Cancelled: சென்னையில் இரண்டாவது நாளாக கடுமையான பனிமூட்டம் நிலவுவதால் சென்னையில் தரையிறங்க முடியாமல் 12 விமானங்கள், ஹைதராபாத் பெங்களூர் விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன.

சென்னையில் கடும் பனிமூட்டம்
சென்னையில் கடும் பனிமூட்டம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 15, 2024, 4:38 PM IST

சென்னை: போகி பண்டிகை கொண்டாடப்பட்டதின் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முதல் கடும் புகை மற்றும் பனிமூட்டம் நிலவி வருகிறது. கடும் பனிமூட்டம் காரணமாக நேற்று சென்னையில் இருந்து விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன. இந்நிலையில் 2வது நாளாக இன்று காலையும் கடுமையான பனிமூட்டம் நிலவியதால், சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

திருப்பி அனுப்பப்பட்ட விமானங்கள்: லண்டனில் இருந்து சென்னை வந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம், குவைத்தில் இருந்து சென்னை வந்த குவைத் ஏர்லைன்ஸ், ஏர் இந்தியா விமானிகள், மஸ்கட்டில் இருந்து சென்னை வந்த ஓமன் ஏர்லைன்ஸ் விமானம், புனேயிலிருந்து சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், கோலாலம்பூரில் இருந்து சென்னை வந்த ஏர் ஏசியா பயணிகள் விமானம், சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், இலங்கையிலிருந்து சென்னை வந்த ஏர் இந்தியா பயணிகள் விமானம், 8 விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல், பெங்களூர் மற்றும் ஹைதராபாத் விமான நிலையங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.

அதேபோல் டெல்லி கொல்கத்தா மும்பை செங்காடு ஆகிய நான்கு மாதங்கள் சென்னையில் தரை இறங்க முடியாமல் கோவை திருவனந்தபுரம் திருச்சி உள்ளிட்ட விமான நிலையங்களுக்கு திருப்பி அனுப்பினர். அதைப்போல் மும்பை கொல்கத்தா ஹைதராபாத் உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் இருந்தது.’

மேலும் சென்னையில் இருந்து புறப்படும் விமானங்களான அந்தமான், டெல்லி, பெங்களூர், கொல்கத்தா, ஹைதராபாத், துபாய், மஸ்கட் உள்ளிட்ட 12 விமானங்கள் சென்னையில் இருந்து புறப்பட முடியாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இன்று காலை 7 மணி வரையில் பெரிய அளவில் பனிப்பொழிவு இல்லாமல் இருந்த நிலையில் காலை 7 மணிக்கு மேல் திடீரென சென்னை விமான நிலைய பகுதியில் மூடுபனி ஏற்பட்டுள்ளதால், விமானங்கள் சேவையில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

ரத்து செய்யப்பட்ட விமானங்கள்: இதுவரையில் 40-க்கும் மேற்பட்ட வருகை புறப்பாடு விமானங்கள் தாமதமாகி பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதற்கிடையே டெல்லியில் இருந்து இன்று காலை 5:20 மணிக்கு, சென்னை வரவேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், காலை 10:20 மணிக்கு டெல்லியில் இருந்து சென்னை வர வேண்டிய விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், அதேபோல் காலை 11:20 மணிக்கு, சென்னையில் இருந்து டெல்லி செல்லும் விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், ஆகிய 3 விமானங்கள், இன்று டெல்லியில் நிலவும் கடுமையான பனிமூட்டம் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: திருச்சியில் சமத்துவ பொங்கல் விழா : தாரை தப்பட்டை முழங்க கொண்டாடிய அமைச்சர் கே.என்.நேரு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.