ETV Bharat / state

ஏ.ஆர்.ரஹ்மானிடம் ரூ.3 கோடி நஷ்டஈடு கேட்ட வழக்கு: என்ன செய்தது தெரியுமா நீதிமன்றம்? - Three crore rupees compensation case against AR Rahman dismissed

இசை நிகழ்ச்சி தோல்வியடைந்ததாகக் கூறி, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானிடம் மூன்று கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

ar rahman
ஏ.ஆர்.ரஹமான்
author img

By

Published : Jul 23, 2021, 9:31 PM IST

சென்னை: சென்னையைச் சேர்ந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் காளியப்பன் என்பவர், கடந்த 2000ஆம் ஆண்டு பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை வைத்து துபாயில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார்.

ஆனால், இந்த நிகழ்ச்சி வெற்றிபெறவில்லை என்றும், நிகழ்ச்சி நடத்தியதில் நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறி 3 கோடி ரூபாய் ஏர் ஆர்.ரஹ்மான் தரவேண்டும் என்றும் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் சிவில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார்.

அந்த வழக்கில் இசை நிகழ்ச்சியால் நஷ்டம் ஏற்பட்ட நிலையில் இசை நிகழ்ச்சியின் காப்புரிமையை தனியார் இசை நிறுவனங்களுக்கு விற்று ஏ.ஆர்.ரஹ்மான் லாபம் அடைந்ததாகத் தெரிவித்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுப்ரமணியம் முன்பு நடைபெற்று வந்தது.

நஷ்டம் ஏற்பட்டதற்கும் ஏர்.ஆர்.ரஹ்மானுக்கும் சம்பந்தம் இல்லை

இந்த வழக்கில் ஏ.ஆர்.ரஹ்மான் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நர்மதா சம்பத், "நிகழ்ச்சியில் நஷ்டம் ஏற்பட்டதற்கும் ஏர்.ஆர்.ரஹ்மானுக்கும் சம்பந்தம் இல்லை. நிகழ்ச்சிக்காகப் பேசிய ஒப்பந்தத் தொகையைக்கூட மனுதாரர் தரவில்லை. போலியாக இழப்பீடு கேட்டுள்ளார்.

எனவே, மனுவை தள்ளுபடி செய்யவேண்டும்" என்று தெரிவித்தார்.

அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் உமா சங்கர், இந்தப் பிரச்னை முடிந்துவிட்டதாகத் தெரிவித்திருந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, பிரச்னை முடிந்துவிட்டதா என்பது குறித்து நீதிமன்றத்தில் தெரிவிக்குமாறு ஏ.ஆர். ரஹ்மான் தரப்புக்கு உத்தரவிட்டிருந்தார்.

வழக்குத் தள்ளுபடி

இந்நிலையில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது ஏ.ஆர்.ரஹ்மான் தரப்பு வழக்கறிஞர் எந்த சமரசமும் ஏற்படவில்லை என்றும், மனுவைத் தள்ளுபடி செய்யவேண்டும் என்றும் வாதிட்டார். மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் உமா சங்கரும், தனக்கு மனுதாரரிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை என்று தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஏ.ஆர்.ரகுமானுக்கு எதிரான நஷ்ட ஈடு கேட்டு தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: நகர்ப்புற நக்சல் ஆகிறாரா சூர்யா?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.