ETV Bharat / state

அபாயகரமான பைக் சாகசம்: இளைஞர்களுக்கு டோஸ் விட்ட போலீஸ் - boys Dangerous adventure on a two Wheeler

வடபழனி பகுதியில் இருசக்கர வாகனத்தை அபாயகரமாக ஓட்டி சாகசம் செய்த மூன்று இளைஞர்களை பெற்றோருடன் வரவைத்து காவல் துறையினர் எச்சரித்தனர்.

அபாயகரமான பைக் சாகசம்
அபாயகரமான பைக் சாகசம்
author img

By

Published : Aug 23, 2021, 8:53 AM IST

சென்னையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாகவும் அபாயகரமாகவும் இருசக்கர வாகனங்களை ஓட்டுபவர்களையும் - பைக் ரேஸ் என்ற பெயரில் ஆபத்தான முறையில் வாகனங்கள் ஓட்டுதல், சாகசம் செய்தல் ஆகியவற்றில் ஈடுபடும் நபர்களையும் கண்டறிந்து கைதுசெய்ய காவல் ஆணையர் உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில் நேற்று வடபழனி ஜவகர்லால் நேரு நூறு அடி சாலையில் மூன்று இளைஞர்கள் அபாயகரமான முறையில் இருசக்கர வாகனத்தை ஓட்டி சாகசத்தில் ஈடுபட்டதாக பாண்டிபஜார் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.

'ஆபத்தை நோக்கி பயணிக்கும் உலகம்' - எச்சரிக்கும் சுற்றுச்சூழல் நிபுணர்கள்

தகவலின் அடிப்படையில் காவல் துறையினர் சென்றபோது அந்த இளைஞர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். பின்னர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது அதில் மூன்று இளைஞர்கள் அபாயகரமான முறையில் இருசக்கர வாகனத்தை ஓட்டி சாகசத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

அறிவுரை வழங்கிய காவல் துறையினர்

இதையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து வாகனத்தின் பதிவு எண்ணைக் கொண்டு மூன்று இளைஞர்களை காவல் துறையினர் கைது செய்தனர். மூவரும் 17 வயது சிறுவர்கள் எனத் தெரியவந்தது.

இதையடுத்து இருசக்கர வாகனத்தைக் கைப்பற்றி மூன்று இளைஞர்கள், அவர்களது பெற்றோர்களை பாண்டிபஜார் போக்குவரத்து காவல் நிலையத்துக்கு வரவைக்கப்பட்டு காவல் துறையினர் அறிவுரை வழங்கினர்.

மேலும் இனிமேல் இதுபோன்று சட்டத்திற்குப் புறம்பான முறையில் இருசக்கர வாகனங்களை இயக்க மாட்டோம் எனச் சிறுவர்கள் மூன்று பேரும் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்துச் சென்றனர்.

இதையும் படிங்க: வரப்போகும் ஆபத்தை எச்சரிக்கும் காலநிலை: ஏழாவது இடத்தில் இந்தியா

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.