சென்னை: சென்னை மெரினா கடலில் மூழ்கிய சிறுவனை ஹெலிகாப்டரில் தேடும்பணி இரண்டாவது நாளாக நடைபெறுகிறது. கோடம்பாக்கம் அரசுப் பள்ளியில் படித்து வரும் 9 ஆம் வகுப்பு மாணவர்கள் 3 பேர் கடந்த ஆகஸ்டு 19ஆம் தேதி மெரினா கடற்கரைக்கு வந்துள்ளனர். பின்னர் அங்குள்ள திருவள்ளுவர் சிலையின் பின்புறம் உள்ள கடற்பகுதியில் அந்த மூவரும் குளித்துள்ளனர்.
அப்போது 3 மாணவர்களையும் கடல் அலை இழுத்துச் சென்றுள்ளது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் கூச்சலிடவே, அப்பகுதியிலிருந்த கடலோர பாதுகாப்பு குழுமத்தில் பணியாற்றி வரும் காவலர்கள் முருகானந்தன், அரவாணன் ஆகியோர் கடலில் குதித்து 2 மாணவர்களைக் காப்பாற்றினர். ஒரு மாணவனைக் காப்பாற்ற முடியவில்லை. கடலில் மூழ்கினான்.
இதையும் படிங்க: சந்திரனை சந்தித்த மனிதர்கள்..! இஸ்ரோ மனிதர்களை நிலவிற்கு அனுப்புவது எப்போது?
தகவலறிந்து மெரினா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காப்பாற்றப்பட்ட 2 மாணவர்களையும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். விசாரணையில் கடலில் மூழ்கிய மாணவன் அருள் என்பது தெரியவந்தது. மாணவர்களின் பெற்றோர்களை வரவழைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், கடலில் மூழ்கிய மாணவனைத் தேடும் பணியில் கடலோர பாதுகாப்பு குழும காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், இரண்டாவது நாளாகச் சிறுவனின் உடல் கிடைக்காததால் மெரினா மீட்புப் படையினர் ஹெலிகாப்டர் உதவியுடன் இரண்டாவது நாட்களாகச் சிறுவன் அருளின் உடலைத் தேடி வருகின்றனர். அதேபோல், மெரினாவில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் மெரினா முகத்துவாரத்திலிருந்து அண்ணா சதுக்கம் வரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: நாங்குநேரி சம்பவத்திற்கு ஆட்சியாளர்கள் தான் காரணம்: செ.கு. தமிழரசன் தாக்கு!
நேற்று விடுமுறை என்பதால் வீட்டில் சொல்லாமல் மூன்று பேரும் கடலில் குளிக்க வந்தபோது, இந்த விபரீதம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து சிறுவனின் உடலை மீட்கும் பணியில் மீட்புப் படையினரும், தீயணைப்புத்துறையினரும் இணைந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பள்ளி சிறுமி பல மாதங்களாக பாலியல் வன்கொடுமை - அதிகாரி மீது போக்சோ வழக்கு!