இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "சென்னையில் உள்ள நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி லிங்கேஸ்வரன், சென்னை சிபிஐ, சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அதனால் தஞ்சாவூர் கூடுதல் மாவட்ட நீதிபதி ரவி, நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அதேபோல விழுப்புரம், சிவகங்கை, கடலூர், நாகர்கோவில், தஞ்சாவூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்மூலம் தமிழ்நாடு முழுவதும் 28 மாவட்ட நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது தெரியவருகிறது.
இதையும் படிங்க: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கைது