சென்னை, மாநகராட்சி தேனாம்பேட்டை மண்டலத்தில், 109 முதல் 126 வரை உள்ள வார்டுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி மற்றும் திட்டப் பணிகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் தியாகராயர் நகரில் உள்ள சர் பிட்டி தியாகராயர் அரங்கத்தில் நடைபெற்றது. சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, கவுன்சிலர்கள், மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களை மேயர் பிரியா சந்தித்தார். அப்போது மழை வெள்ள நீர் வடிகால் குறித்த நடவடிக்கைகள் தொடர்பாக நடந்து முடிந்த கலந்தாய்வு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகவும், ‘மேலும், தங்கள் வார்டில் உள்ள குறைகளை கவுன்சிலர்கள் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார்.
சிங்கார சென்னை 2.0 திட்டம் மூலம் 254 கோடி ரூபாய் செலவிலும் தமிழக அரசின் நிதியாக 291 கோடி ரூபாய் செலவிலும் சென்னை முழுவதும் வெள்ள நீர் வடிகால் பணிகள் நடைபெறுவதாக மேயர் கூறினார்.
இதையும் படிங்க: தெலங்கானாவில் தொடரும் ஆணவக்கொலை: பெற்றோரே மகளைக் கொலை செய்த கொடூரம்!