கரோனா தொற்றால் 50 விழுக்காட்டிற்கு மேல் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்தை மருத்துவர்கள் பரிந்துரை செய்து வருகின்றனர். அதனால் ரெம்டெசிவிர் மருந்துக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது.
இதனை தங்களுக்கு சாதகமாக்கி கொண்ட சில நபர்கள், ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு விற்று வருகின்றனர். காவல் துறையினரும் கள்ளச்சந்தையில் மருந்தை கூடுதல் விலைக்கு விற்று வருபவர்களைக் கண்டறிந்து கைது செய்து வருகின்றனர்.
அந்த வகையில், சென்னையில் இதுவரை கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்தை விற்றதாக 24 நபர்கள் கைது செய்யப்பட்டு, 243 ரெம்டெசிவிர் மருந்து பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ரெம்டெசிவிர் மருந்தை பதுக்கி வைத்தாலோ அல்லது கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்தாலோ அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.
இதையும் படிங்க: கீழ்ப்பாக்கத்தை விட மோசம்... நேரு ஸ்டேடியத்தை கூறு போட்ட மக்கள்!