சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் புதிதாக 2,283 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மேலும் நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 17858 என குறைந்துள்ளது.
பொது சுகாதாரத் துறை இயக்குனரகம் ஜூலை 14ஆம் தேதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் புதிதாக 32 ஆயிரத்து 61 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறிவதற்கான ஆர்டி பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டில் இருந்த 2,283 நபர்களுக்கு புதிதாக கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் தமிழ்நாட்டில் இதுவரை 6 கோடி 63 லட்சத்து 97 ஆயிரத்து 226 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் 35 லட்சத்து 10 ஆயிரத்து 809 நபர்கள் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தனர் என்பது தெரியவந்துள்ளது.
மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 17858 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 2,707 மேலும் குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்து 54 ஆயிரத்து 923 என உயர்ந்துள்ளது.
மேலும் சென்னையில் 682 நபர்களுக்கும் செங்கல்பட்டில் 367 நபர்களுக்கும் கோயம்புத்தூரில் 156 நபர்களுக்கும் காஞ்சிபுரத்தில் 102 நபர்களுக்கும் திருவள்ளூர் மாவட்டத்தில் 176 நபர்களுக்கும் புதிதாக பாதிப்பு அதிக அளவில் கண்டறியப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:ராமதாஸ் கரோனா தொற்றால் பாதிப்பு; முதலமைச்சர் நலம் விசாரிப்பு!