ETV Bharat / state

மீட்பு விமானத்தில் வருவோர் மூலமும் நடைபெறும் தங்கக் கடத்தல் : 402 கிராம் தங்கக் கட்டிகள் பறிமுதல் - தங்கக் கட்டிகளை அனுப்பியவர்கள், பெறுபவர்களின் விவரம்

சென்னை : அபுதாபியிலிருந்து சென்னை வந்த மீட்பு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 22 லட்சம் ரூபாய் மதிப்புடைய 402 கிராம் தங்கக்கட்டிகளை சுங்கத் துறையினர் பறிமுதல் செய்து, மூன்று பேரை கைது செய்தனர்.

22 lakh worth gold biscuits seized in chennai airport three persons arrested

author img

By

Published : Aug 10, 2020, 8:26 PM IST

அபுதாபியிலிருந்து சென்னைக்கு ஏா் இந்தியா சிறப்பு மீட்பு விமானம் இன்று அதிகாலை வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளுக்கு மருத்துவப் பரிசோதனைகள் முடிந்த பிறகு சுங்கத் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அந்த விமானத்தில் வந்த பயணிகளில் மூன்று பேர் மீது சந்தேகம் ஏற்படவே, சுங்கத் துறையினர் அவர்களின் உடைமைகள் உள்பட அனைத்தையும் சோதனையிட்டனர். பிறகு அவர்களை தனியறைக்கு அழைத்துச் சென்று சோதனையிட்டனர்.

அதில், மூன்று பேரும் உள்ளாடைகளுக்குள் தங்கக்கட்டிகள் மறைத்து வைத்திருந்தது கண்டறியப்பட்டது. அவா்களிடமிருந்து 22 லட்சம் ரூபாய் மதிப்புடைய 402 கிராம் தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், மூவரும் கைது செய்யப்பட்டனா்.

இதையடுத்து சுங்கத் துறையினர் வழக்குப் பதிவு செய்து, அவா்களிடம் தங்கக் கட்டிகளை அனுப்பியவர்கள், பெறுபவர்களின் விவரங்களை விசாரித்து வருகின்றனர்.

முதல்கட்ட விசாரணையில் மூவரும், தஞ்சாவூரைச் சோ்ந்த சாமிநாதன் கண்ணன் (வயது 41), தங்கவேல் சிவசங்கா் (வயது 49), திருச்சியைச் சோ்ந்த கமரூதீன் ஷாஜகான் (வயது 57) என்பது தெரியவந்தது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.