ETV Bharat / state

ஆறாவது மெகா கரோனா தடுப்பூசி முகாம்; 22.33 லட்சம் பேருக்கு தடுப்பூசி! - minister ma subramaniyan

தமிழ்நாடு முழுவதும் நேற்று நடைபெற்ற ஆறாவது மெகா கரோனா தடுப்பூசி முகாமில் 22.33 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

ஆறாவது மெகா கரோனா தடுப்பூசி முகாம்; 22.33 லட்சம் பேருக்கு தடுப்பூசி!

author img

By

Published : Oct 24, 2021, 9:59 AM IST

சென்னை: தமிழ்நாடு முழுவதும் நேற்று (அக்.23) நடைபெற்ற ஆறாவது மெகா கரோனா தடுப்பூசி முகாமில் 22.33 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவுப்படி ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி, சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 50 ஆயிரம் மையங்களில் நேற்று மெகா கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

இதில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைத்து பயனாளிகளுக்கும், கரோனா முதல், இரண்டாம் தவணை செலுத்த திட்டமிடப்பட்டது.

இதுவரை நடைபெற்ற ஐந்து மெகா கோவிட் தடுப்பூசி முகாம்கள் பற்றிய விவரம் பின்வருமாறு:

முதலாவது சுற்று (செப்.12) - 28.91 லட்சம்

இரண்டாவது சுற்று (செப்.19) - 16.43 லட்சம்

மூன்றாவது சுற்று (செப்.26) - 25.04 லட்சம்

நான்காவது சுற்று (அக்.3) - 17.04 லட்சம்

ஐந்தாவது சுற்று (அக்.10) - 22.85 லட்சம்

இந்நிலையில் நேற்று ஆறாவது மெகா கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களில் மொத்தம் 22 லட்சத்து 33 ஆயிரத்து 219 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

இதில் முதல் தவணையாக 8 லட்சத்து 67 ஆயிரத்து 573 பயனாளிகளுக்கும், இரண்டாவது தவணையாக 13 லட்சத்து 65 ஆயிரத்து 646 பயனாளிகளுக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து மாநிலத்தில் நேற்று நடைபெற்ற மெகா கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமினை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை (அக்.24) கோவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெறாது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தூய்மைப் பணியாளர் மேரிக்கு பொன்னாடை அணிவித்து இறையன்பு வாழ்த்து

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.