இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள ட்விட்டர் பதிவில், "இளைஞர்களின் எழுச்சி நாயகரான தீரன் சின்னமலையின் புகழ் பாடும் வகையில் - முத்தமிழறிஞர் கலைஞர் முதலமைச்சராக இருந்த போது அவருக்கு கிண்டியில் சிலை வைக்கப்பட்டது" என குறிப்பிட்டுள்ளார்.
"ஓடாநிலையில் கோட்டை அமைத்துப் போரிட்ட விடுதலை வீரர், சங்ககிரிக் கோட்டையில் ஆடிப்பெருக்கு நாளில் வீரமரணம் அடைந்த தீரன் சின்னமலையின் 216-ஆம் நினைவுநாளான இன்று, சென்னையில் முத்தமிழறிஞர் கலைஞர் நிறுவிய தீரன் சின்னமலையின் திருவுருவச்சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினேன்" எனறும் முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க :தீரன் சின்னமலை நினைவு தினம் - எடப்பாடி பழனிசாமி மரியாதை