சென்னை ரெட்டேரியில் கஞ்சா கடத்தப்படுவதாக போதைப்பொருள் தடுப்புபிரிவு காவல்துறையினக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திர பிரதேச மாநிலத்தின் பதிவு எண் கொண்ட வேன் ஒன்று வந்தது. அந்த வாகனத்தை சோதனை செய்ததில் சர்க்கரைவல்லிகிழங்கு மற்றும் ப்ளாஸ்டிக் பைகள் உள்ளிட்டவற்றில் மறைத்து வைத்து சுமார் 210 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது.
வேனில் கஞ்சாவை கடத்தி வந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஈஸ்வரன் (28) என்ற நபரை போதைப்பொருள் தடுப்புப்பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர். கஞ்சாவை ஆந்திராவில் இருந்து கடத்தி வந்து சென்னையில் சப்ளை செய்வதாக விசாரணையில் தெரியவந்தது.
இதே போன்று திருவள்ளூர் பகுதியைச் சேர்ந்த நடராஜன் என்பவர் வீட்டில் போதை பொருள் வைத்திருப்பதாக எழுந்த ரகசிய தகவலின் அடிப்படையில் கடந்த 11ஆம் தேதி அவரது வீட்டை சோதனை செய்ததில் 3.270 கிலோ மெத்தம்பெடமைன், 25.670 கிலோ எபிடிரின், 270 கிராம் ஆஷிச் மற்றும் 20 போதை மாத்திரைகள் உள்ளிட்ட போதைப்பொருட்கள் மறைத்து வைத்திருந்ததை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் இவர் அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: தங்கை கணவரைக் கொல்ல முயன்று தன்னைத்தானே சுட்டுக்கொண்ட இளைஞர்!