ETV Bharat / state

சென்னை முழுவதும் கஞ்சா விநியோகிக்க ஏற்பாடு - வீட்டில் பதுக்கிய 210 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல்! - 210 kg drugs seized by police at puzhal

சென்னை: புழல் ரெட்டேரி பகுதியில் வீட்டில் பதுக்கி, சென்னை முழுவதும் விநியோகம் செய்ய வைத்திருந்த 45 லட்சம் மதிப்பிலான 210 கிலோ கிராம் 97 கஞ்சா பொட்டலங்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

210 kg drugs seized
கஞ்சா
author img

By

Published : Dec 18, 2019, 9:08 AM IST

சென்னையில் புழல் அடுத்த ரெட்டேரி எம்ஜிஆர் நகரில், வீட்டில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் தீவிரமாகக் கண்காணித்த காவல் துறை, சர்க்கரை வள்ளி கிழங்குடன் மறைத்து கஞ்சாவைக் கடத்த முயன்ற போது கையும் களவுமாக பிடித்தனர்.

பின்னர் நடத்திய விசாரணையில், இந்த பொட்டலங்கள் ஆந்திர மாநிலத்திலிருந்து சென்னை முழுவதும் விநியோகம் செய்வதற்காக கொண்டு வந்தது தெரிய வந்தது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நபரை ஏற்கெனவே போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கடந்த ஒரு வருடமாக 10 பேர் கொண்ட தனிப்படை மூலம் தேடி வந்தது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, அந்த நபரிடம் இந்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர் கைது செய்யபட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து அம்பத்தூர் மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் ஆஜர் செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

வீட்டில் பதுக்கிய 210 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல்

இதையும் படிங்க: வீட்டுக்குள் நுழைந்த திருடன் - நையப்புடைத்து போலீஸிடம் ஒப்படைத்த மக்கள்

Intro:புழல் ரெட்டேரி பகுதியில் வீட்டில் பதுக்கி சென்னை முழுவதும் விநியோகம் செய்ய வைத்திருந்த 45 லட்சம் மதிப்பிலான 210 கிலோ கஞ்சா 97 பொட்டலங்களாக பறிமுதல்.Body:புழல் ரெட்டேரி பகுதியில் வீட்டில் பதுக்கி சென்னை முழுவதும் விநியோகம் செய்ய வைத்திருந்த 45 லட்சம் மதிப்பிலான 210 கிலோ கஞ்சா 97 பொட்டலங்களாக பறிமுதல்.

கடத்தலுக்கு பயன்படுத்திய வேன் ஆட்டோ பறிமுதல் ஒருவர் கைது.

10 பேர் கொண்ட இந்திய போதை பொருள் தடுப்பு பிரிவு தனிப்படை அதிகாரிகள் அதிரடி.

புழல் அடுத்த ரெட்டேரி எம் ஜி.ஆர் நகர் 2 வது தெருவில் உள்ள வீட்டில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்தது . தகவலின்பேரில் அங்கு வந்த காவல்துறையினர் சர்க்கரை வள்ளி கிழங்குடன் கடத்த முயன்ற போது கையும் களவுமாக அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும் இந்த பொட்டலங்கள் ஆந்திர மாநிலத்தில் இருந்து சென்னை முழுவதும் வினியோகம் செய்வதற்காக கொண்டுவந்து சப்ளை செய்யும்போது பிடிபட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் ஏற்கனவே இந்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு மூலம் கைது செய்யப்பட்டு வழக்கு உள்ள நிலையில் ஈஸ்வரன் கடந்த ஒரு வருடமாக 10 பேர் கொண்ட தனிப்படை போலீசார் தேடி வந்த நிலையில்.

இன்று புழல் ரெட்டேரியில் வைத்து கையும் களவுமாக கைது செய்து அயப்பாக்கத்தில் உள்ள இந்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் ஆந்திராவில் இருந்து கொண்டு வந்து சென்னை முழுவதும் விநியோகம் செய்து விட்டு மீதம் வைத்திருந்த கஞ்சாவை கைப்பற்றி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர் மேலும் இதற்கு மூளையாக செயல்படும் நபர் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

பின்னர் கைது செய்யபட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து அம்பத்தூர் மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் ஆஜர் செய்து புழல் சிறையில் அடைத்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.