ETV Bharat / state

தமிழ்நாட்டில் 2023 ஆண்டுக்கான தேசிய சீனியர் ஹாக்கி போட்டி: அமைச்சர் உதயநிதி - dmk

2023ஆம் ஆண்டிற்கான ஆண்களுக்கான தேசிய சீனியர் ஹாக்கி போட்டியை நடத்தும் வாய்ப்பை ‘ஹாக்கி இந்தியா’ தமிழ்நாட்டிற்கு வழங்கியுள்ளது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

2023 தமிழ்நாட்டில் ஆண்களுக்கான தேசிய சீனியர் ஹாக்கி போட்டி நடைபெறும்

author img

By

Published : Dec 22, 2022, 8:13 AM IST

சென்னை: எழும்பூரில் உள்ள மேயர் இராதாகிருஷ்ணன் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஹாக்கி உலகக் கோப்பையினை கேரள மாநில ஹாக்கி சம்மேளன நிர்வாகிகளிடம் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், சிறப்புரையாற்றிய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, "ஹாக்கி ஆண்கள் உலகக் கோப்பை போட்டிக்கான உலகக் கோப்பையினை தமிழ்நாடு மக்களின் சார்பில் தமிழ்நாட்டிற்கு வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். உலகக் கோப்பை ஹாக்கி போட்டியானது 1971ம் ஆண்டு துவங்கப்பட்டது. 1975வது ஆண்டு மலேசியா நாட்டின் கோலாலம்பூர் நகரில் நடைபெற்ற 3வது உலக கோப்பை போட்டியில் இந்திய அணி கோப்பை வென்று வந்தது. ஒலிம்பிக் போட்டி ஹாக்கியில், இந்தியா 8 முறை தங்கப் பதக்கங்களையும், ஒரு முறை உலககோப்பையையும் வென்று சாதனை படைத்துள்ளது.

பல தமிழ்நாடு ஹாக்கி வீரர்கள் இந்தியாவுக்காக தமிழ்நாட்டிலிருந்து உலகக் கோப்பையில் விளையாடி உள்ளனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த பிலிப்ஸ், கோவிந்தா, லெஸ்லி பெர்னான்டஸ், பாஸ்கரன், திருமால்வளவன், தினேஷ் நாயக் போன்ற தமிழ்நாடு ஹாக்கி வீரர்கள் இந்திய அணிக்காக உலக கோப்பை மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடி தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளார்கள்.

இந்தியாவில் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதுகூட தலைசிறந்த ஹாக்கி வீரர் தயான் சந்த் அவர்கள் பெயரில் தயான்சந்த் கேல் ரத்னா விருது என வழங்கப்படுகிறது. 2022இல் போபாலில் நடைபெற்ற தேசிய அளவிலான ஆண்கள் ஹாக்கி போட்டியில் தமிழ்நாடு ஆண்கள் ஹாக்கி அணி வெள்ளிப் பதக்கம் வென்றது. இதனை பாராட்டி தமிழ்நாடு முதலமைச்சர் வீரர்களுக்கு ஊக்கம் தரும் வகையில் ஊக்கத் தொகையாக 18 வீரர்களுக்கு தலா ரூபாய் ஒன்றரை லட்சம் வீதம் மொத்தம் 27 லட்சம் ரூபாய் வழங்கி கவுரவித்தார்.

இதுமட்டுமல்ல தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு விடுதியில் தங்கிப் பயிலும் அரியலூரைச் சேர்ந்த கார்த்தி மற்றும் முன்னாள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு விடுதி மாணவரும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவருமான மாரீஸ்வரன், இந்திய அணி சார்பில் ஆசிய கோப்பை போட்டியில் விளையாடி நம் அணி வெண்கலம் வெல்லக் காரணமாக இருந்தார்கள்.

முதலமைச்சர் இந்த இரு வீரர்களையும் பாராட்டி அவர்களுக்கு உயரிய ஊக்கத் தொகையாக தலா 10 லட்சம் ரூபாய் வழங்கினார். ஹாக்கி வீரர் கார்த்தி ஒரு எளிய குடும்ப பின்னணியைச் சேர்ந்தவர், அவர் வீட்டின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் கூட பார்த்தேன். சாதாரண ஓட்டு வீட்டிலிருந்து இன்று இந்தியாவின் ஹாக்கி அணியில் விளையாடும் வீரராக உயர்ந்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த மாதம் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அரியலூர் சென்றிருந்த போது, கார்த்தி அவர்களுடைய வீட்டிற்கு நேரில் சென்று அவரது குடும்பத்திற்குத் தமிழ்நாடு அரசின் சார்பில் வீடு வழங்கி ஊக்கப்படுத்தினார். தற்போது கார்த்தி உலகக் கோப்பையில் கலந்துகொள்ளவுள்ள இந்திய அணியின் பயிற்சி முகாமில் பயிற்சி பெற்று வருகிறார் என்பதையும் உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

2021 மற்றும் 2022இல் நடைபெற்ற தேசிய ஜூனியர் ஆண்கள் போட்டியில் ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாட்டின் செயல்பாட்டை அங்கீகரிக்கும் விதமாக 2023ஆம் ஆண்டிற்கான ஆண்களுக்கான தேசிய சீனியர் ஹாக்கி போட்டியை நடத்தும் வாய்ப்பை ‘ஹாக்கி இந்தியா’ தமிழ்நாட்டிற்கு வழங்கியுள்ளது. செஸ் ஒலிம்பியாட்டை எப்படி மிகச் சிறப்பாக நடத்தினோமோ அதேபோல் இந்தப் போட்டியையும் நடத்துவோம் என்பது உறுதி. தற்போது நடைபெறும் 15வது உலகக்கோப்பை ஹாக்கி போட்டி இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் புவனேஷ்வர் மற்றும் ரூர்கேலா நகரங்களில் வரும் ஜனவரி 13ஆம் தேதி துவங்கி 29ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

உலகின் தலைசிறந்த நாடுகள் பங்கேற்கும் இப்போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு இக்கோப்பை வழங்கப்படும். அத்தகைய பெருமை வாய்ந்த கோப்பைத்தான் இன்று தமிழ்நாடு வந்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகம், எம்.ஒ.பி வைஷ்னவா கல்லூரி என பல்வேறு கல்லூரிகளுக்கு எடுத்துச்செல்லப்பட்டு அடுத்தாக நம் அண்டை மாநிலமான கேராளவுக்கு செல்லவுள்ளது.

விளையாட்டு என்பது நம் இளைஞர்களை பக்குவப்படுத்தி நல்வழிப்படுத்தும் ஓர் இடம். இளைஞர் சக்திகளை ஒருங்கிணைத்து நல்ல மாற்றத்தை கொன்டுவருவதற்கான களமாகவும் விளையாட்டு தான் உள்ளது. நாம் படித்துவிட்டு பல்வேறு நிறுவனங்களுக்கு வேலைக்கு சென்றாலும், அல்லது நிறுவனங்களை உருவாக்கினாலும், குழுவாக இணைந்து செயல்படுவது என்பது மிக முக்கியமானது. அதை விளையாட்டுகள் தான் நமக்கு கற்றுத் தருகின்றன.அதேபோல், வெற்றித் தோல்விகளுக்கும் விளையாட்டு போட்டிகள் தான் பக்குவப்படுத்துகின்றன. வெற்றிபெறும் நேரத்தில் தலைக்கணம் கொள்ளாமலும், தோல்வியுறும் நேரத்தில் துவளாமலும் இருக்க விளையாட்டு தான் நமக்கு சொல்லிக்கொடுக்கின்றன.

தனி மனித முன்னேற்றம் மட்டுமல்ல, ஒரு விளையாட்டால், ஒரு விளையாட்டு வீரரால் உலகையே திரும்பி பார்க்க வைத்து விடவும் முடியும். இந்தியாவோடு ஒப்பிடுகையில் அர்ஜென்டினா மிகச்சிறிய நாடு. அர்ஜென்டினாவின் மக்கள்தொகை வெறும் 4.7 கோடி தான். தமிழ்நாடு மக்கள் தொகையில் பாதிதான். சில தினங்களுக்கு முன் நடந்த கால்பந்து உலகக் கோப்பை போட்டியில் வென்று உலகையே திரும்பி பார்க்க வைத்து விட்டது. மெஸ்ஸி அடித்த கோல்களால் உலகமே அர்ஜன்டினாவை தேட ஆரம்பித்துவிட்டது. கூகுள் சி.இ,ஓ சுந்தர்பிச்சை கூட அதைத்தான் தெரிவித்துள்ளார். கடந்த 25 ஆண்டுகளுக்கு இல்லாத அளவுக்கு பிஃபா உலகக்கோப்பை போட்டியை மக்கள் உலக அளவில் கூகுளில் தேடியுள்ளனர் என்கிறார்.

இதையெல்லாம் யோசிக்கும்போது விளையாட்டு எவ்வளவு முக்கியமானது, எவ்வளவு கவனம் பெறக்கூடியது என்பது புரியும். அத்தகைய விளையாட்டுகளில் ஆர்வத்தை உருவாக்க வேண்டியது நம் கடமை. அதற்கு நிச்சயம் இந்த ஹாக்கி உலகக் கோப்பை போட்டிகள் உதவும் என நம்புகிறேன். நாம் முதலில் நம் இளைஞர்களிடம் ஆர்வத்தை உருவாக்கி திறமையாளர்களை கண்டு பிடிக்க வேண்டும். சரியான திறமையாளர்களை அடையாளம் காண வேண்டியது நம் கடமை.

அப்படி தேர்ந்தெடுக்கப்படும் திறமையாளர்களுக்கு தேவையான பயிற்சிகள் மற்றும் வசதிகளை நாம் செய்து தரவேண்டும். அதை ஒரு பணியாக நினைக்காமல், கடமையாக எண்ணி உழைக்க தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு துறை தயாராக இருக்கிறது என்பதை துறையின் அமைச்சராக தெரிவித்துக்கொள்கிறேன். அதேபோல், ’ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு’ சார்பாக ஹாக்கி விளையாட்டை பிரபலப்படுத்தும் விதமாக தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் 100 அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியருக்கு ஹாக்கி விளையாட்டு உபகரணங்கள் மற்றும் சீருடைகள் வழங்கி அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இன்னும் பல முன்னெடுப்புகளை மேற்கொள்ளவுள்ளோம். எதிர்வரும் காலத்தில் தமிழ்நாடு விளையாட்டுத் துறையிலும் ஒரு முன்னோடி மாநிலமாக உருவாகும். இந்த உலகக் கோப்பை ஹாக்கி போட்டியை நடத்துவதிலும் தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசுக்கு துணை நிற்கும்" என கூறினார்.

இதையும் படிங்க: சரியான மேடை அமைந்தால் சிறை சென்ற இளைஞரும் மெஸ்ஸியாக மாறுவார் - நீதிபதி பி.என்.பிரகாஷ்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.