ETV Bharat / state

2021 RECAP : 2021ஆம் ஆண்டின் முக்கிய அரசியல் நிகழ்வுகள் ஒரு பார்வை!

2021ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசியலில் சட்டப்பேரவைத் தேர்தல், ஆட்சி மாற்றம், சசிகலா வருகை, அதிமுக உட்கட்சி தேர்தல், பாமக- அதிமுக கூட்டணி விரிசல், உள்ளாட்சி தேர்தல், சசிகலா ஆடியோ அரசியல், ஓபிஎஸ்- இபிஎஸ் இரட்டை தலைமை, சீமான் அரசியல் சர்ச்சை, சிதறுண்ட மக்கள் நீதி மய்யம் என பல்வேறு புதிய அரசியல் பிரச்சனைகள் கடந்து சென்ற ஆண்டாக 2021ஆம் ஆண்டு அமைந்தது. 2021ஆம் ஆண்டில் சந்தித்த அரசியல் பிரச்சனைகள் குறித்து இந்த சிறப்பு தொகுப்பில் காணலாம்.

2021-important-political-events
2021-important-political-events
author img

By

Published : Dec 29, 2021, 4:06 PM IST

2021ஆம் ஆண்டின் முக்கிய நிகழ்வான தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் 10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் திமுக ஆட்சி அரியணை பொறுப்பேற்று ஆறு மாதங்களுக்கு மேல் ஆட்சி செய்து வருகிறது. திமுக தலைமையில் காங்கிரஸ், விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, மனிதநேய மக்கள் கட்சி ஒரு கூட்டணியாகவும், அதிமுக தலைமையில் பாஜக, பாமக, புதிய நீதி கட்சி, புரட்சி பாரதம் இணைந்து மாற்று அணியாக களம் கண்டன.

3ஆவது, 4ஆவது அணிகளாக மக்கள் நீதி மய்யம், சமத்துவ மக்கள் கட்சி, ஜனநாயக மக்கள் கட்சி கூட்டணி அமைத்தும், நாம் தமிழர் கட்சி தனி அணியாகவும், டிடிவி தினகரன், SDPI மற்றும் தேமுதிக ஒரு அணியாக என ஐந்து முனை போட்டிகளுடன் களம் கண்டன.

இதில் திமுக கூட்டணி 159 இடங்களையும், அதிமுக கூட்டணி 75 இடங்களையும் பிடித்து திமுக வெற்றி பெற்றது. இதையடுத்து முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் முதல் முறையாக பொறுப்பேற்று ஆட்சி செய்து வருகிறார், கேரளா ,மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் அதே ஆட்சி தொடரும் நிலையில் , தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் நடைபெற்றது குறிப்பிடதக்கது.

ஆட்சி மாற்றம்

தமிழ்நாடு அரசியலில் இரண்டு முறை தொடர்ந்து வெற்றி பெற்று அதிமுக ஆட்சி செய்தது. ஜெயலலிதா மறைவிற்கு பின் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக பொறுப்பேற்று நான்கு ஆண்டுகள் முழுமையாக ஆட்சி செய்து நிறைவு செய்தார். பாஜக உடனான உறவு, உட்கட்சி பிரச்சனை, ஜெயலலிதா எதிர்த்த உதய் மின் திட்டம், விவசாய மசோதா, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு என மக்கள் விருப்பாத பல்வேறு திட்டங்களுக்கு அதிமுக ஆதரவாக நாடாளுமன்றத்தில் வாக்களித்ததை மக்கள் ரசிக்கவில்லை.

ஆளும் அரசிற்கு எதிராக வீசிய எதிர்ப்பு அலை உள்ளிட்ட காரணங்களால் அதிமுக கூட்டணி தோல்வியை சந்தித்தது. அதேபோல் ஒருங்கிணைந்த நிலையான அணியாக திமுக கூட்டணி உருவெடுத்து முதன்முறையாக அறுதி பெரும்பான்மை உடன் ஆட்சி அமைத்து, முதல் முறையாக மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்று கொண்டார்.

ஸ்டாலின்
முதலமைச்சர் ஸ்டாலின்

சசிகலா வருகையும், ஆடியோ அரசியலும்

சொத்துகுவிப்பு வழக்கில் சிறை தண்டணை பெற்று வந்த ஜெயலலிதாவின் தோழியான சசிகலா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து சிறை தண்டணைக்கு பின் பிப்ரவரி 8ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார். இதையடுத்து மேளதாளங்கள் முழங்க பெங்களூரில் இருந்து விடுதலையாகி சென்னை வந்தடைந்தார். சசிகலா வருகை தமிழ்நாடு அரசியலில் பெரும் மாற்றம் ஏற்படும், அதிமுகவில் கோலோச்சுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பு அரசியல் இருந்து சில காலம் ஓய்வு பெறுவதாக அறிவித்து முற்றுப் புள்ளி வைத்தார்.

அதிமுக போதிய வெற்றி பெற முடியாத காரணத்தால் மீண்டும் அதிமுக பொதுச்செயலாளர் என லெட்டர்பேடில் தொடர்ந்து அறிக்கை வெளியிட்டு வருகிறார். ஓபிஎஸ் மனைவி இறந்த போது நேரடியாக மருத்துவமனை சென்று அஞ்சலி செலுத்தி ஆறுதல் கூறினார். அதே போல் அவைத்தலைவராக இருந்த மதுசூதனன் உள்ளிட்டோர் மறைவிற்கும் அஞ்சலி செலுத்தினார். ஆடியோ மூலம் அதிமுக நிர்வாகிகள் சிலரிடம் தொடர்பு கொண்டு பேசிவந்த அவர், ஜெ நினைவிடத்தில் மரியாதை செலுத்தி விட்டு சுற்றுபயணம் என அறிவித்த நிலையில், எந்தவித சலனமுமின்றி அரசியல் செய்து வருகிறார், மீண்டும் அதிமுகவை கைப்பற்றும் அவரது எண்ணம் ஈடேறுமா என்பது அடுத்த ஆண்டு தெரியவரும்.

சசிகலா
சசிகலா

அதிமுக உட்கட்சி தேர்தல்

சசிகலா வருகைக்கு பின் அதிமுக கட்சி விதிகளுக்கு முரணாக செயல்பட்டு வந்த நிர்வாகிகள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்கள் பொதுக்குழுவால் தேர்ந்து எடுக்கப்படுவார்கள் என்ற முடிவு ரத்து செய்யப்பட்டு தொண்டர்களால் நேரடியாக தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது.

டிசம்பர் 7ஆம் தேதி உட்கட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு இருவர் மட்டுமே வேட்புமனுதாக்கல் செய்த காரணத்தால் இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதில் வேட்பு மனுதாக்கல் செய்ய வந்த தொண்டர்கள் சிலர் தடுத்து நிறுத்தப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டனர். பல்வேறு பிரச்சனைகளுக்கிடையே ஒரு மனதாக இருவரும் தேர்வு செய்யப்பட்டனர்.

ஓபிஎஸ்- இபிஎஸ்
ஓபிஎஸ்- இபிஎஸ்

அதிமுக-பாமக கூட்டணி விரிசல்

மக்களவை தேர்தல், சட்டசபை தேர்தலை இணைந்து எதிர்கொண்ட பாமக, உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது. இதில் கட்சியின் நலன் கருதியும், பாமக நிர்வாகிகளின் கருத்துபடி தனித்து போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. இது குறித்து பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ் பாமகவால் மற்ற கட்சிகள் தான் பலனடைந்தன. இதனால் பாமகவிற்கு போதிய பலன் கிடைக்கவில்லை. கூட்டணி கட்சியினர் போதிய ஒத்துழைப்பு தரவில்லை. எடப்பாடி பழனிசாமியால் அவர்கள் கட்சி நிர்வாகிகளையே கட்டுப்படுத்த முடியவில்லை என்று தெரிவித்தார்.

அதேபோல் விழுப்புரத்தில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், பாஜக கூட்டணியால் சிறுபான்மையினர் ஓட்டுகளையும், பாமக கூட்டணியால் தாழ்த்தப்பட்டவர்கள் ஓட்டுகளை இழந்தோம் என வெளிப்படையாக பேசினார். உள்ளாட்சி தேர்தல் தனித்து போட்டி என்ற முடிவு அதிமுக தலைவர்களை அதிருப்திக்கு உள்ளாக்கியது. தொடர்ந்நு சேலத்தில் பேசிய அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, கூட்டணியில் இருந்து விலகினால் விலகி கொள்ளட்டும் என காட்டமாக பேசினார். நகர்புற உள்ளாட்சி தேர்தலில் இரு அணிகளும் தனித்தே போட்டியிடக்கூடிய சூழல் உருவாகி உள்ளது.

பாமக தலைவர் ராமதாஸ்
பாமக தலைவர் ராமதாஸ்

உள்ளாட்சி தேர்தல்
கடந்த ஆண்டு 27 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற நிலையில் ஒன்பது மாவட்டங்களில் வார்டு மறுவரை உள்ளிட்ட பணிகளுக்காக தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. அக்டோபர் 6 மற்றும் 9ஆம் தேதி இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில் பெரும்பாலான ஒன்றிய கவுன்சிலர் பதவிகளையும், மாவட்ட கவுன்சிலர் பதவிகளை மொத்தமாக திமுக கைப்பற்றி பெரும்பாலான மாவட்ட ஊராட்சி தலைவர், ஒன்றிய தலைவர் பதவிகளை பிடித்தது.

இதில் விசிக கூட்டணி 4 மாவட்ட கவுன்சிலர் பதவிகளை பிடித்த நிலையில், அதிமுக இரண்டு இடங்களை மட்டுமே பெற்றது. அதே போல் பாமக ஒரு மாவட்ட கவுன்சிலர் இடத்தை கூட பிடிக்க முடியவில்லை. அடுத்த ஆண்டு பிப்ரவரி இரண்டாவது வாரம் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது குறிப்பிடதக்கது.

சீமான் அரசியல் சர்ச்சை

அம்பத்தூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், செருப்பை தூக்கி காண்பித்து பேசி சர்ச்சையில் சிக்கினார். பல்வேறு அரசியல் கட்சியினரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அதிமுக கூட்டணி இது பற்றி எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. அதே போல் தருமபுரி மாவட்டம் மொரப்பூர் பொதுக்கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் நிர்வாகி திமுகவை கடுமையாக தாக்கி பேசினார்.

சீமான்
சீமான்

அப்போது திமுக கிளை செயலாளர் செங்கண்ணன் என்பவர் மேடையேறி நாம தமிழர் கட்சி தொண்டரை தாக்கிய சம்பவம் பெரும் பேசு பொருளாக மாறியது. இதில் திமுக நிர்வாகி மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் பேசியது விவாதத்தை கிளப்பியது. இது போன்று நாம் தமிழர் கட்சியினரின் திமுக எதிர்ப்பு அரசியல் அடுத்த ஆண்டும் தொடருமா என பார்க்கலாம்.

உடைந்த மக்கள் நீதி மய்யம்

சட்டப்பேரவை தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி, ஜனநாயக மக்கள் கட்சி உடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி எதிர்பார்த்த வெற்றியை பெற முடியவில்லை. கோவை தெற்கில் போட்டியிட்ட கமல்ஹாசன் 2 ஆயிரம் வாக்குகள் வித்தியாத்தில் நூலிழையில் தோல்வியை தழுவினார்.

மக்கள் நீதி மய்யம்
மக்கள் நீதி மய்யம்

கட்சியில் இருந்து பொது செயலாளராக இருந்த மகேந்திரேன் கருத்து வேறுபாட்டால் கட்சியில் இருந்து விலகினார். இதே போல் பொதுச்செயலாளராக இருந்த மௌரியா, சிகே குமரவேல், மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்ட பத்ம்பிரியா உள்ளிட்ட பலர் பதவி விலகினர். உள்ளாட்சி தேர்தலிலும் எதிர்பார்த்த வெற்றியை கமலால் பெற முடியவில்லை. கட்சி உயிர்ப்புடன் இயக்குமா? அடுத்த ஆண்டு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான இடங்களை கைப்பற்றுமா? என்பது பின்னர்தான் தெரியவரும்.

இதையும் படிங்க : 2021ஆம் ஆண்டில் நம்மை விட்டு பிரிந்த திரை பிரபலங்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.