ETV Bharat / state

அரசு, அத்தியாவசிய பணியாளர்களுக்கு 200 மாநகரப் பேருந்துகள் இயக்கம் - Transport Corporation chennai

சென்னை: அத்தியாவசிய பணியாளர்கள், 50 விழுக்காடு அரசுப் பணியாளர்களுக்கு 200 மாநகரப் பேருந்துகள் இயக்கப்படும் என மாநகரப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

tn goverment
tn goverment
author img

By

Published : May 18, 2020, 11:50 AM IST

கரோனா வைரஸ் (தீநுண்மி) பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு தளர்வுகளுடன் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதில் மருத்துவம், பொது சுகாதாரம், குடிநீர், தூய்மைப் பணி உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளின் பணியாளர்களும், அரசுப்பணியாளர்கள் 50 விழுக்காட்டினரும் பணிக்கு வர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

அவர்களுக்காக சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து 200 பேருந்துகள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம், "ஏற்கனவே அத்தியாவசிய பணியாளர்கள், 50 விழுக்காடு அரசுப் பணியாளர்களுக்கு 175 பேருந்துகள் இயக்கிவருகின்றன.

அதைத்தொடர்ந்து தற்போது தலைமைச் செயலக பணியாளர்களுக்காக கூடுதல் பேருந்துகள் தேவைப்படுவதால், மேலும் 25 பேருந்துகள் இயக்கப்படும்.

தேவைப்பட்டால் கூடுதல் பேருந்துகளை இயக்கவும் பேருந்துகள் தயார் நிலையில் உள்ளன" எனத் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: தயார் நிலையில் கோவை பேருந்து நிலையங்கள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.