வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், திருவள்ளூர், கோயம்புத்தூர், நாகப்பட்டினம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களின் ஆட்சியர்கள் வெவ்வேறு துறைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
நகர் மற்றும் ஊரமைப்பு இயக்குநராக, சரவணவேல்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும (சி.எம்.டி.ஏ.) உறுப்பினர் செயலாளராக, அன்சுல் மிஸ்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
நாகை ஆட்சியர் பிரவீன் பி.நாயர், ஊரக வளர்ச்சித்துறை இயக்குனராகவும், விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக இருந்த அண்ணாதுரை, வேளாண் துறை இயக்குநராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பொன்னையா, நகராட்சி நிர்வாக இயக்குநராகவும், வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், கூட்டுறவுத்துறை பதிவாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியாளர் சிவன் அருள், பதிவுத்துறை ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கோவை ஆட்சியர் நாகராஜன், நில நிர்வாக ஆணையராகவும், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, சுற்றுலாத்துறை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: பொதுமக்கள் கடைபிடிக்கவேண்டிய கரோனா தடுப்பு நெறிமுறை குறித்த காணொலி