ETV Bharat / state

வடமாநில பெண்ணிடம் வழிப்பறி செய்த 2 பேர் கைது! ஒருவர் தலைமறைவு - பெரியமேடு

சென்னை: கண் சிகிச்சைக்காக, ஆட்டோவில் பயணித்த வடமாநில பெண்ணிடம் வழிப்பறி செய்த இரண்டு நபர்களை பெரியமேடு காவல் துறையினர் கைது செய்தனர்.

ஆட்டோவில் வடமாநில பெண்ணிடம் வழிப்பறி செய்த இரண்டு நபர் கைது
author img

By

Published : May 10, 2019, 6:08 PM IST

மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் சிபானி மன்டி (55). இவர் கண் சிகிச்சைக்காக தனது உறவினர் இருவருடன், நேற்று முன்தினம் ஹவுரா ரயில் மூலம் சென்னை வந்துள்ளார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து நுங்கம்பாக்கம் சங்கர் நேத்ராலயா மருத்துவமனைக்கு ஆட்டோவில் சென்றுள்ளார்.

அப்போது, ஆட்டோ பெரியமேடு ஈவிஆர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத மூன்று பேர், ஆட்டோவில் ஓரமாக அமர்ந்து இருந்த சிபானி மன்டியின் கைப்பையை பறித்துச் சென்றனர். அதில் 20 ஆயிரம் ரூபாய் பணமும், மூன்று ஏடிஎம் கார்டுகளும் இருந்துள்ளன. இது குறித்து பெரியமேடு காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.

Auto
ஆட்டோவில் வழிப்பறி செய்த மூன்று மர்ம நபர்கள்

இந்நிலையில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த இருவரை பெரியமேடு காவல் துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்களின் பெயர் தமிழ்செல்வன், சீனிவாசன் என்பது தெரியவந்துள்ளது. மேலும், அருண்குமார் என்பவர் தலைமறைவாகி உள்ளதால், காவல்துறையினர் அவரை வலை வீசி தேடி வருகின்றனர்.

மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர் சிபானி மன்டி (55). இவர் கடந்த 8 ஆம் தேதி அதிகாலையில் கண் சிகிச்சைக்காக உறவினர் இரண்டு நபர்களுடன் ஹவுரா ரெயில் மூலம் சென்னை வந்துள்ளார். பிறகு நுங்கம்பாக்கம் சங்கர் நேத்ராலயா மருத்துவமனைக்கு சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து  TN 05 AC 3587 என்ற ஆட்டோவில் செென்றுள்ளார்.

ஆட்டோ பெரியமேடு
EVR சாலையில் சென்று கொண்டிருந்த போது காந்தி இர்வின் பிரிட்ஜில் இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத 3 நபர்கள் ஆட்டோவில் ஓரமாக அமர்ந்து இருந்த சிபானி மன்டியின் கைப்பையை பறித்து சென்றுள்ளனர். அதில் 20 ஆயிரம் ரூபாய் பணமும், 3 ஏடிஎம் கார்டுகளும் இருந்துள்ளது.

இது குறித்து பெரியமேடு போலீசார் விசாரணை நடத்தினர். கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதனடிப்படையில் கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த
தமிழ்செல்வன், சீனிவாசன் ஆகியோரை பெரியமேடு போலீசார் கைது செய்தனர்.  அருண்குமார் என்பவர் மட்டும் தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.