ETV Bharat / state

புனேவில் இருந்து சென்னை வந்தடைந்த 2 லட்சம் கரோனா தடுப்பூசி மருந்துகள் - கோவாக்சின் தடுப்பூசி

புனேவில் இருந்து கொண்டுவரப்பட்ட இரண்டு லட்சம் கரோனா தடுப்பூசி மருந்துகள் இன்று(ஏப்.22) சென்னை வந்தடைந்தன.

சென்னை வந்தடைந்த 2 லட்சம் கரோனா தடுப்பூசி மருந்துகள்

author img

By

Published : Apr 23, 2021, 2:01 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தொடர்ந்து அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் பாரத் பயோடெக் நிறுவனத்தால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசியும், சீரம் நிறுவனத் தயாரிப்பில் உருவாக்கப்பட்ட கோவிஷீல்டு தடுப்பூசியும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இன்று பூனேவில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சுமார் இரண்டு லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசி மருந்துகள் சென்னை கொண்டு வரப்பட்டன.

புனேவில் இருந்து 2 லட்சம் கரோனா தடுப்பூசி மருந்துகள் சென்னை வருகை..
தடுப்பூசி மருந்துகளை சுகாதாரத்துறை அலுவலர்கள் பெற்றுக்கொண்டனர். இதையடுத்து, குளிர்சாதன வாகனம் மூலம் சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள மாநில தடுப்பூசி சேமிப்பு மையத்திற்க்கு கொண்டு செல்லப்பட்டு மருந்துகள் வைக்கப்படும் என்றும் பின்னர் தடுப்பூசி பற்றாக்குறை உள்ள மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
20 லட்சம் தடுப்பூசிகள் கேட்கப்பட்ட நிலையில் ஒரு லட்சம் கோவாக்சின், 6 லட்சம் கோவிஷீல்டு மருந்துகளை மத்திய அரசு ஏற்கனவே வழங்கி உள்ளது. அதனைத் தொடர்ந்து தற்போது 2 லட்சம் தடுப்பூசிகள் சென்னை கொண்டுவரப்படுள்ளன.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.