நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் ராமசாமி, குற்றங்களை தடுக்க என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குற்றங்களை தடுக்க சிசிடிவி எத்தனை இடங்களில் பொருத்தப்பட்டுள்ளது என்பது பற்றி கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி: "சென்னை மாநகரில் குற்றங்களை கண்காணிக்க 2 லட்சத்துக்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. சென்னை மட்டுமில்லாமல் பல்வேறு நகரங்களிலும் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது. பல்வேறு நகரங்களில் படிப்படியாக சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுவருகிறது.
சிசிடிவி மூலம் குற்றங்களை தடுக்கவும் குற்றவாளிகளை பிடிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. சிசிடிவி கேமரா பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டதன் மூலமாக குற்றங்கள் குறைந்துள்ளன. குற்றவாளிகளை எளிதில் பிடித்து நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை வாங்கிக் கொடுக்கவும் சிசிடிவி கேமரா உதவுகிறது" என்று பதிலுரைத்தார்.
இதையும் படிங்க: ஜெயலலிதாவின் பிறந்தநாள் மாநில பெண்கள் பாதுகாப்புத் தினமாக அனுசரிக்கப்படும்! - முதலமைச்சர் அறிவிப்பு