ETV Bharat / state

சென்னைக்கு வந்த 2 லட்சத்து 40 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசி! - சென்னை அண்மைச் செய்திகள்

சென்னை : புனேவில் இருந்து 2 லட்சத்து 40 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசி விமானம் மூலமாக சென்னை வந்தடைந்தன.

கோவிஷீல்டு தடுப்பூசிகள்
கோவிஷீல்டு தடுப்பூசிகள்
author img

By

Published : May 25, 2021, 7:28 AM IST

தமிழ்நாட்டில் கரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்டவா்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. தமிழ்நாட்டுக்கு தேவையான அளவு தடுப்பூசி இன்னும் முழுமையாக வந்து சேரவில்லை. கூடுதல் தடுப்பூசியை உடனடியாக வழங்க மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. மாநில அரசே நேரடியாக தடுப்பூசி வாங்கவும், தயாரிக்கவும் முடிவு செய்துள்ளது.

இதுவரை தமிழ்நாட்டுக்கு மத்திய தொகுப்பில் இருந்து 79 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி, 12 லட்சத்து 90 ஆயிரம் கோவாக்சீன் தடுப்பூசி வந்தடைந்துள்ளன. சுமார் 73 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் இன்று (மே.24) புனேவில் இருந்து 2 லட்சத்து 40 ஆயிரம் கோவீஷில்டு தடுப்பூசி விமானம் மூலமாக சென்னை வந்டைந்துள்ளன.

மொத்தம் இருபது பாா்சல்களில் தடுப்பூசி மருந்துகள் வந்தடைந்துள்ளன. அவற்றில் மூன்று பார்சல்களில் இருந்த 36 ஆயிரம் தடுப்பூசி பெரியமேட்டில் உள்ள மத்திய அரசின் கிடங்கிற்கு அனுப்பப்பட்டன. மீதமுள்ள 2 லட்சத்து 4 ஆயிரம் தடுப்பூசிகள் தேனாம்பேட்டை மாநில அரசின் கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டன. கிடங்குகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள தடுப்பூசி, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் பிரித்து அனுப்பப்படும் என சுகாதாரத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க : கடைகளுக்கு படையெடுத்த மக்கள் கூட்டம்: கரோனா எங்கே என்று கேட்கும் அளவிற்கு பர்ச்சேஸ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.