ETV Bharat / state

ஆவடியில் விரைவு ரயில் மோதி 2 பேர் உயிரிழப்பு! - avadi

சென்னை ஆவடி ரயில் நிலையத்தில் விரைவு ரயில் மோதிய விபத்தில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போலீசார் தீவிர விசாரணை
ஆவடியில் விரைவு ரயில் மோதி 2 பேர் சம்பவ இடத்தில் பலி
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 25, 2023, 2:46 PM IST

ஆவடியில் விரைவு ரயில் மோதி 2 பேர் சம்பவ இடத்தில் பலி

சென்னை: ஆவடி ரயில் நிலையத்தில் நேற்று (செப்.24) இரவு 9 மணியளவில், ஒரு ஆண், ஒரு பெண் மற்றும் அவரது 12 வயது மகன், பெண் காவலர் ஒருவர் என கும்பலாக தண்டவாளத்தை கடக்க முயன்றனர். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென இரண்டு தண்டவாளங்களிலும் எதிரெதிரே விரைவு ரயில்கள் வந்தன. இதில், தண்டவாளங்களுக்கு இடையே சிக்கிக்கொண்ட அந்த ஆண் மற்றும் பெண்ணின் மீது ரயில் மோதியது இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

உயிரிழந்த பெண்ணுடன் வந்த 12 வயது சிறுவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைகாக சேர்க்கப்பட்டார். பெண் காவலர் உடனடியாக சுதாரித்து கீழே படுத்து விட்டதால், லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

மேலும், ரயிலில் அடிபட்டு இறந்தவர்கள் விவரம் குறித்து இதுவரை அடையாளம் காணப்படவில்லை. இந்த விபத்து குறித்து ஆவடி ரயில்வே காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்த தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: "பொறியியல் மாணவர்கள் புத்தகத்தை தவிர புதிய அறிவியல் தொழில்நுட்பத்தை கற்க வேண்டும்" - விஞ்ஞானி எஸ்.கே.வர்ஷ்னி!

ஆவடி ரயில் நிலையத்தில் ரயில்வே தண்டவாளத்தைக் கடக்கும் பகுதியில் கேட் இல்லை என்று கூறப்படுகிறது. பயணிகளே இரு பக்கமும் பார்த்துவிட்டு தண்டவாளத்தைக் கடந்து செல்லும் சூழல் நிலவி வருகிறது. ரயில் வருவது குறித்து எந்த முன்னெச்சரிக்கையும் செய்யப்படுவதில்லை என பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும், ரயில் தண்டவாளத்தை கடக்க ஆவடி ரயில்வே நிர்வாகம் புதிதாக மேம்பாலம் கட்டி பொதுமக்களுக்கு பயன்பாட்டுக்கு உள்ள நிலையிலும், பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகள் தங்கள் கவனக்குறைவால் தண்டவாளத்தை கடந்து உயிரிழக்கும் சம்பவம் வாடிக்கையாக உள்ளது.

கடந்த மூன்று மாதங்களில் ஆவடி ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடந்து உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 115 பேர் என்று புள்ளி விவரம் கூறுகிறது. பெரம்பூர் அம்பத்தூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் லிப்ட் வசதி உள்ளது போன்று விரைவில் ஆவடி ரயில் நிலையத்திற்கும் மேம்பாலத்தை பயன்படுத்த லிப்ட் வசதி விரைவில் வர வேண்டும் என்பதே ரயில் பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

எனவே, ஆவடி ரயில் நிலைய தண்டவாள கிராஸிங்கில் உடனடியாக கேட் அமைக்க வேண்டும் எனவும், விரைவு ரயில் வருவதை முன்னெச்சரிக்கையாக அறிவிக்க வேண்டும் எனவும் பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: "பா.ஜ.க வை தன் தோலில் இருந்து இறக்கும் தைரியமும், தெம்பும் அ.தி.மு.க.விற்கு இல்லை" - ஜவாஹிருல்லா!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.