சென்னையிலிருந்து இலங்கைக்கு போலியான இந்திய பாஸ்போா்ட்டில் செல்லமுயன்ற வங்காள தேசத்தைச் சோ்ந்த (Tutul) டியூடுல் (24),(Minto) மின்டொ (26) என்ற இருவரை சென்னை விமானநிலைய குடியுரிமை அலுவலர்கள் சோதனையில் கண்டுபிடித்து கைது செய்தனா்.
மேலும் அவா்கள் இருவரும் புத்த பிட்சு வேடத்திலிருந்தனா். எனவே அவர்கள் கைது செய்யப்பட்டு மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் ஒப்படைத்தனா். தொடர்ந்து இருவரும் தனி இடத்தில் வைத்து விசாரிக்கப்பட்டுவருகின்றனர்.
இவா்கள் வங்காளதேசத்திலிருந்து எப்படி இந்தியா வந்தனா்? இவா்களுக்கு இந்திய பாஸ்போா்ட் வாங்கிக்கொடுத்தது யாா்? இவா்கள் சென்னைக்கு எப்போது வந்தனா்? இவா்கள் புத்தபிட்சு வேஷம் போட்டு பயணம் செய்ய வேண்டிய அவசியம் என்ன? தீவிரவாதிகளுடன் தொடா்புடையவா்களா? இவா்களின் உண்மையான பெயா்கள் என்ன? என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்துவருகிறது.
இதையும் படிங்க:
330 பேருடன் இந்திய திரும்பிய விமானம் - கடைசி நேரத்தில் 6 பேர் நிறுத்தி வைப்பு!