ETV Bharat / state

'கரோனா ஆலோசனை பெற 2.77 லட்சம் அழைப்புகள் வந்துள்ளன' - சென்னை மாநகராட்சி - மனப்பிரச்சினைக்கு ஆலோசனை

சென்னை: கரோனா வைரஸ் தொடர்பான ஆலோசனைகளைப் பெற மாநகராட்சி நிர்வாகத்தால் அமைப்பட்டுள்ள ஆலோசனை மையத்திற்கு இதுவரையில் 2 லட்சத்து 77 ஆயிரத்து 361 அழைப்புகள் வந்துள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

2.77 lakhs people contact chennai corporation corona helpline

author img

By

Published : Jun 30, 2020, 6:31 PM IST

சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்குக் கரோனா வைரஸ் தொற்று தொடர்பாக ஆலோசனைகளை வழங்கும் வகையில் செயல்பட்டுவரும் ஆலோசனை மையத்தை ஆணையர் பிரகாஷ் நேரில் சென்று ஆய்வுசெய்தார். ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இந்தியளவில் தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்கள் மட்டும்தான் கரோனா வைரஸ் சம்பந்தமான தகவலையும் வெளிப்படையாக மக்களுக்கு அளித்துவருகின்றன.

சென்னையில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்குப் பின் அதிக விழுக்காட்டில் குணமடைந்துள்ளனர். கரோனா வைரசைக் குணப்படுத்தும் மருந்து என சமூக வலைதளங்களில் பரவும் செய்திகளை மக்கள் நம்ப வேண்டாம். தற்போது வைரசைக் குணப்படுத்துவதற்கான மருந்து, முகக்கவசம் அணிவதும், தகுந்த இடைவெளியைப் பின்பற்றுவதும்தான்.

வீடு வீடாக கரோனா பரிசோதனை மேற்கொண்டுவரும் மாநகராட்சிப் பணியாளர்களிடம் எந்தவித ஒளிவுமறைவுமின்றி அனைத்து விவரத்தையும் மக்கள் தெரிவிக்க வேண்டும். நோய்த் தொற்று தொடர்பான ஏதேனும் அறிகுறி இருந்தால் உடனடியாக அவர்களிடம் தெரிவிக்க வேண்டும். சென்னையிலுள்ள 15 மண்டலங்களிலும் ஆலோசனை மையங்கள் செயல்பட்டுவருகின்றன. அந்தந்த மண்டலங்களுக்கான தொலைபேசி எண்களை ஸ்டிக்கரில் அச்சடித்து சென்னையில் உள்ள வீடுகள் தோறும் ஒட்டப்பட்டுவருகிறது.

அந்தந்த மண்டலங்களில் இருக்கும் மக்கள் கரோனா சம்பந்தமாக எந்தச் சந்தேகம் இருந்தாலும் ஸ்டிக்கரில் இருக்கும் எண்களைத் தொடர்புகொண்டு பயன்பெறலாம். மார்ச் 26ஆம் தேதி முதல் ஜூன் 30ஆம் தேதி வரை அம்மா மாளிகையிலுள்ள ஆலோசனை மையத்திற்கு இதுவரையில் 2 லட்சத்து 77 ஆயிரத்து 361 அழைப்புகள் வந்துள்ளன. இந்த மையங்களில் பணிபுரியும் பணியாளர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணிசெய்துவருகின்றனர்.

மேலும் அம்மா மாளிகையிலுள்ள தொலைபேசி ஆலோசனை மையத்தில், கரோனா தொடர்பாக மனப் பிரச்சினைக்கு ஆலோசனை வழங்குவதற்கென்று தனிக் குழு உள்ளது. அதுமட்டுமின்றி வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் ஏதாவது மருத்துவம் சம்பந்தமாக சந்தேகங்கள் இருப்பின், அவர்கள் தொடர்பு கொள்வதற்கும் மருத்துவர்களை இந்த மையத்தில் பணி அமர்த்தியுள்ளோம்.

மேலும் கரோனா பாதிக்கப்பட்டவர்களின் உடனிருந்தவர்களைத் தொடர்புகொண்டு, அவர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்கெனவும் தனிக்குழு உள்ளது. இனிவரும் காலங்களிலும் 15 மண்டலங்களிலுள்ள மையத்திலும் இதுபோல மருத்துவக்குழு, மனப் பிரச்சனைக்கு ஆலோசனை வழங்கும் குழு என அனைத்துக்கும் தனிக்குழுவை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது" எனத் தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.