ETV Bharat / state

உள்ளாடையில் வைத்து தங்கப்பசை உருண்டை கடத்தல்: 2 பேர் கைது

துபாயிலிருந்து சென்னைக்கு மூன்று கிலோ தங்கம் கடத்தி வந்த இருவரை சுங்கத்துறையினர் கைது செய்தனர்.

தங்கம் கடத்தல்
தங்கம் கடத்தல்
author img

By

Published : Oct 25, 2021, 10:42 PM IST

சென்னை: சாா்ஜாவிலிருந்து ’ஏா் அரேபியா ஏா்லைன்ஸ்’ விமானம் இன்று (அக்.25) அதிகாலை சென்னை சா்வதேச விமான நிலையம் வந்தடைந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்கத்துறையினா் சோதனையிட்டனா்.

அப்போது சிவகங்கையைச் சோ்ந்த இரண்டு பயணிகள் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவா்களை நிறுத்தி சுங்கத்துறையினா் விசாரணை நடத்தினா். பின்னர் அவா்களை தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதனையிட்டனா்.

அப்போது அவா்கள் இருவரின் உள்ளாடைகளுக்குள் ஏழு பாா்சல்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டுப்பிடித்து எடுத்தனா். அந்த பாா்சல்களில் 71.72 லட்சம் ரூபாய் மதிப்பிலான 1.5 கிலோ தங்கப்பசை உருண்டைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. இதையடுத்து தங்கப்பசை உருண்டைகளை பறிமுதல் செய்து, இருவரையும் காவலர்கள் கைது செய்தனா்.

இதனிடையே சென்னை சா்வதேச விமான நிலையத்தின் வருகைப் பகுதியில் உள்ள குப்பைத் தொட்டியில் பாா்சல் ஒன்று கிடப்பதாக விமான நிலைய தூய்மை பணியாளா்கள் மேலாளருக்குத் தகவல் கொடுத்தனா். இதையடுத்து பாதுகாப்பு அலுவலர்கள் மெட்டல் டிடெக்டா், மோப்ப நாய் உதவியுடன் அங்கு சென்று பாா்சலை ஆய்வு செய்தனா்.

சில்வா் பேப்பா் பாா்சலில் 87.82 லட்சம் மதிப்பிலான 1.8 கிலோ தங்கப்பசை மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.தொடர்ந்து அதனைக் கைப்பற்றி சென்னை விமான நிலைய சுங்கத்துறையிடம் ஒப்படைத்தனா்.

இந்த தங்கப்பசை பாா்சல் துபாயிலிருந்து வந்த விமானத்தில் கடத்தி வரப்பட்டதாக இருக்கலாம் என்று சுங்கத்துறையினா் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இந்தப் பார்சல் குறித்து விமான நிலைய சிசிடிவி காட்சிகளை வைத்து ஆய்வு செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: இந்தியாவுக்கான போப் பிரான்சிஸின் பிரதிநிதி தமிழ்நாடு ஆயர்களுக்கு கடிதம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.