ETV Bharat / state

விமான நிலையத்தில் 731 கிராம் தங்கம் பறிமுதல்; 2 பேர் கைது

சென்னை: விமான நிலையத்தில் 34.5 லட்சம் மதிப்புடைய 731 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு 2 பேர் சுங்கத்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

 கிராம் தங்கம் பறிமுதல் 2 பேரை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை

author img

By

Published : Aug 6, 2020, 12:12 PM IST

துபாயில் இருந்து சென்னை வந்த சிறப்பு விமானத்தில் 175 இந்தியர்கள் சென்னை வந்தனர். இதையடுத்து விமான நிலையத்தில் அவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்து சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது அந்த விமானத்தில் வந்த தஞ்சாவூரைச் சேர்ந்த காசிமணி கொளஞ்சி (22), முருகன் சந்திரன் (38) இரண்டு பேரையும் சந்தேகத்தின் பேரில் தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தனர்.

அப்போது ஜீன்ஸ் பேண்டின் பெல்ட் பகுதியில் நான்கு பாலிதீன் கவர்களில் தங்க பசையையும், தங்க கட்டிகளையும் மறைத்து எடுத்து வந்திருந்தது தெரியவந்தது. பின்னர் அவர்களிடமிருந்து 34 லட்சத்து 5 ஆயிரம் மதிப்புடைய 731 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதையடுத்து இரண்டு பேரையும் கைது செய்து துபாயில் இவா்களிடம் இந்த தங்கக்கட்டிகளை கொடுத்து அனுப்பியது யாா்? இங்கு இந்த தங்கக்கட்டிகளை வாங்க இருந்தது யாா்? நேற்று சென்னை விமானநிலையத்தில் தங்க கடத்தலில் கைதானவர்களுக்கும், இந்த இருவருக்கும் தொடா்பு உள்ளதா? என்றும் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.