சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அலுவலர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அதில் துபாயிலிருந்து சென்னை வந்த விமானப்பயணிகள் ராமநாதபுரத்தைச் சோ்ந்த சையது லபாய் (42), இஸ்மாயில்(25), புதுக்கோட்டையைச் சோ்ந்த அஜ்மல்கான்(18) ஆகியோர் உடலுக்குள், உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து கடத்தி வந்திருப்பது தெரியவந்தது.
அவர்களிடம் பறிமுதல் செய்ததில் மொத்தம் ரூ.45 லட்சத்து 91 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஒரு கிலோ 67 கிராம் எடைகொண்ட தங்கத்தை சுங்கத்துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மூவரிடமும் சுங்கத்துறை அலுவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சென்னை விமான நிலையத்தில் ஐபோன், 2 கிலோ தங்கம் பறிமுதல்!