சென்னை: கட்டணமில்லா கல்வித்திட்டத்தின்கீழ் நடப்பாண்டில் 199 மாணவர்களுக்கு கட்டணமில்லா கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது எனவும், அடுத்த ஆண்டு முதல் ஒரு கல்லூரிக்கு 5 இடங்களை ஒதுக்கீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் கவுரி தெரிவித்துள்ளார்.
சென்னைப் பல்கலைக்கழகம், ஒவ்வொரு ஆண்டும் ஏழை எளிய மாணவர்களுக்கு இளங்கலை பட்டப்படிப்புகளை இலவசமாக வழங்கி வருகிறது. இந்த ஆண்டு 199 மாணவர்களுக்கு கட்டணமில்லா கல்வித்திட்டத்தின்கீழ், கல்லூரி சேர்க்கை உத்தரவு வழங்கும் நிகழ்ச்சி பல்கலைக்கழக வளாகத்தில் நடந்தது. துணைவேந்தர் கவுரி, மாணவர்களுக்கான சேர்க்கை உத்தரவுகளை வழங்கினார்.
மேலும் ஒவ்வொரு கல்லூரியும் மூன்று இடங்களை இத்திட்டத்தின் கீழ் வழங்கி வருகின்றன. அடுத்த ஆண்டு முதல் 5 இடங்களாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இத்திட்டத்தின் மூலமாக ஏழை எளிய மாணவர்கள் கட்டணமில்லாமல் பட்டப்படிப்பை படிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஈபிஎஸ் மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு பட்டியலிட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு